தமிழ்நாடு

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் சேது (எ) சேது செல்வம் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் சேது (எ) சேது செல்வம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் சேது (எ) சேது செல்வம் போட்டியிடுவார்” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் சேது (எ) சேது செல்வம் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட உள்ளன.

இதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் சேது (எ) சேது செல்வம் திமுக தலைவர் மு.கஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் ஆர்.சிவா, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச் நாஜிம் உள்ளிட்ட புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

banner

Related Stories

Related Stories