தமிழ்நாடு

கச்சத்தீவு விவகாரம் : தவறான தகவல் சொல்லும் உறுப்பினர் - பேரவையில் விளக்கம் கொடுத்த எ.வ.வேலு!

தலைப்புச் செய்திக்காகத் தொடர்ச்சியாக விவாதங்களைத் த.வெ.கவினர் திசைதிருப்பி வருகிறார்கள்.

கச்சத்தீவு விவகாரம் : தவறான தகவல் சொல்லும் உறுப்பினர் - பேரவையில் விளக்கம் கொடுத்த எ.வ.வேலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது அவையில் அமளியை ஏற்படுத்தும் வகையில், அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் வேண்டும் என்றே கச்சத்தீவு விவகாரம் குறித்துப் பேசினார்.அப்போது அவர், கலைஞர் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு உடனே தி.மு.க கொறடா எ.வ.வேலு தக்க பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், "கச்சத்தீவு குறித்து இங்கு பல விவாதங்கள் நடந்துள்ளன. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என கலைஞர் இதே மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இதை நாம் கொடுக்கவில்லை; ஒன்றிய அரசுதான் கொடுத்தது.மாநில அரசிடம் ஒப்புதல் கேட்காமல்தான் ஒன்றிய அரசு கச்சத்தீவைக் கொடுத்தது.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தி.மு.க ஆட்சியில் பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர் போகிற போக்கில் தவறான தகவலைப் பதிவு செய்கிறார்" எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கோவி.செழியன், ”சமூக ஊடகங்களில் ரீல்ஸ் போடுவதற்காகத்தான் கச்சத்தீவு விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். ஆளுங்கட்சியினர் ஏதோ அமைதியாக இருப்பது போலவும், எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பது போலவும் ஒரு தலைப்புச் செய்தியை உருவாக்குவதற்காகத் தொடர்ச்சியாக விவாதங்களைத் திசைதிருப்பி வருகிறார்கள்” எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories