தமிழ்நாடு

MMDR விவகாரம் : The New Indian Express-ல் வெளியான பொய் செய்தி - ஐ.பரந்தாமன் கடும் கண்டனம்!

MMDR விவகாரம் : The New Indian Express-ல் வெளியான பொய் செய்தி - ஐ.பரந்தாமன் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2026 (MMDR)-க்கு, திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று The New Indian Express நாளிதல் பொய்யாக செய்தி ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில், இது முற்றிலும் பொய்யான தகவல் என்று கழக சட்டத்துறை இணைச்செயலாளர் ஐ.பரந்தாமன் ஆதாரத்துடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :-

இன்று (27.08.2026) The New Indian Express நாளிதழில் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம்-2026 தொடர்பாக, முதல்வர் விஜய் ஒன்றிய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாக கிடைத்த ‘தகவல்’ அடிப்படையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அரசின் அதிகாரப் பூர்வக் கடிதம் இதுவரை வெளியாகாத நிலையில் ‘Source’ கள் சொன்ன தகவலை வைத்து செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் அதில் கூடுதலாக இந்த சட்ட திருத்தத்தை திமுக எதிர்க்கவில்லை என்ற பொய்யான ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

MMDR விவகாரம் : The New Indian Express-ல் வெளியான பொய் செய்தி - ஐ.பரந்தாமன் கடும் கண்டனம்!

ஆனால் திமுக சார்பில் 12/08/2026 அன்று மேனாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் ஒன்றிய பாஜக அரசின் இந்த சட்ட திருத்தம் 'நிதிக் கூட்டாச்சியின் மீதான நேரடி தாக்குதல்' இது என்று கண்டித்தார். 13/08/2026 அன்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 'இது மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் & மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் மசோதா' என்று வெளிப்படையாக கண்டித்தார் . மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திரு.திருச்சி சிவா அவர்களும் , மாநிலங்களவை உறுப்பினர் எஸ். ஆர். சிவலிங்கம் அவர்களும் இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர்.

14/08/2026 அன்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 'இந்த சட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஏன் எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார்’ என்று கேள்வி எழுப்பிய பிறகு தான் தவெக சார்பில் முதல்வர் விஜய் ஒரு கடிதம் எழுதி உள்ளார் என தகவல் சொல்லபட்டது. அப்போதும் அதுபற்றிய அரசு கடிதத்தை வெளியிடவில்லை. திமுக கேள்வி எழுப்பும் வரை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2026 பற்றி வாய்திறக்க கூட திராணியற்று இருந்தது தவெக அரசு.

MMDR விவகாரம் : The New Indian Express-ல் வெளியான பொய் செய்தி - ஐ.பரந்தாமன் கடும் கண்டனம்!

உண்மைகள் இவ்வாறாக இருக்க வெறும் தகவல் அடிப்படையில் முதல்வர் விஜய் எதிர்த்ததாக ஒரு செய்தியை வெளியிடுவதில் அக்கறை காட்டி இருக்கும் The New Indian Express பத்திரிகை, நாடாளுமன்றத்திலும் சரி , ஊடகம், பத்திரிகைகளின் வாயிலாகவும் சரி வெளிப்படையாக ஒன்றிய அரசின் இந்த சட்டத்தை திமுக எதிர்த்த போதும், எதிர்க்கவில்லை என்ற வகையில் தவறான செய்தி வெளிட வேண்டிய தேவை என்ன.? அழுத்தம் என்ன.?

இந்த செய்தியானது The New Indian Express நாளிதழ் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்குகிறது. ஆகவே சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2026 சார்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த தவறான செய்திக்கு மறுப்பு தெரிவிப்பதோடு, திமுக வின் உண்மையான நிலைப்பாட்டை பதிவு செய்வது தான் ஊடக அறமாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories