தமிழ்நாடு

நேபாளம் வெள்ளம் விவகாரம் : “கரூர் விவகாரத்துடன் எப்படி ஒப்பிட முடியும்?” - பேரவையில் உதயநிதி அதிரடி!

கேள்வி நேரம் நடக்கும்போது, அந்தத் துறையின் செயலாளர்கள் இந்த அவைக்கு வரவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேபாளம் வெள்ளம் விவகாரம் : “கரூர் விவகாரத்துடன் எப்படி ஒப்பிட முடியும்?” - பேரவையில் உதயநிதி அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இன்று (27.08.2026) சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கொடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தையொட்டி ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“பேரவைத் தலைவர் அவர்களே, நேபாள நாட்டின் ராசூவா பகுதியில் நேற்றைய தினம் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 160 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அங்கே 750 பேரைக் காணவில்லை என்று செய்திகள் வருகின்றன.

=> 40-க்கும் மேற்பட்ட தமிழர்கள் :

சுற்றுலா சென்ற கிட்டத்தட்ட 110 இந்தியர்கள் அந்தப் பேரிடரில் சிக்கியீருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிக்கி இருப்பதாக செய்திகள் தொடர்ந்த வண்ணம் வருகிறது. நேபாளம் சென்ற குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று, இங்கு இருக்கின்ற அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கிறாகள். இந்த சம்பவத்தில் எத்தனை தமிழர்கள் சிக்கி இருக்கிறார்கள்? அதில் எத்தனை பேரை நாம் மீட்டு எடுத்துள்ளோம்?

நேபாளம் வெள்ளம் விவகாரம் : “கரூர் விவகாரத்துடன் எப்படி ஒப்பிட முடியும்?” - பேரவையில் உதயநிதி அதிரடி!

=> என்ன மேல் நடவடிக்கைகள்? :

தமிழ்நாடு அரசு சார்பாக, நேற்று அவசர உதவி எண்ணையும் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அரசு அறிவித்த அந்த உதவி எண்களுக்கு, இதுவரை எத்தனை அழைப்புகள் வந்துள்ளன? அந்த அழைப்புகள் தொடர்பாக, என்ன மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?

இந்த நிலைமையில் தமிழர்களைப் பத்திரமாக மீட்டு வருவதற்கு, தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு சிறப்பு அதிகாரியை, இந்த அரசு நியமித்துள்ளதா? அவர்கள் நேபாளம் செல்வதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா?

மேலும், இந்தப் பெருவெள்ளத்தில், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள், எங்கள் தலைவரின் அறிவுறுத்தலின்படி, உடனடியாக இந்தத் தகவலை, விரிவான ஒரு கடிதம் மூலமாக, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களிடம் நேற்று மாலை நேரில் சென்று கொடுத்துள்ளார்.

நேபாளம் வெள்ளம் விவகாரம் : “கரூர் விவகாரத்துடன் எப்படி ஒப்பிட முடியும்?” - பேரவையில் உதயநிதி அதிரடி!

=> குடும்பங்களுக்கு உறுதுணை :

இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாம் அனைவரும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருக்கவேண்டும், என்று கேட்டுக்கொண்டு, இந்த சம்பவம் தொடர்பாக, அரசு உரிய விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நீங்கள் கேள்வி நேரத்தை எடுத்துள்ளீர்கள். 5 கேள்விகளுக்கு அனுமதி அளித்துள்ளீர்கள். 5 கேள்விகளுக்கும் நம் அமைச்சர் அவர்கள் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்கள். துணை கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

நேபாளம் வெள்ளம் விவகாரம் : “கரூர் விவகாரத்துடன் எப்படி ஒப்பிட முடியும்?” - பேரவையில் உதயநிதி அதிரடி!

=> கவன ஈர்ப்பு தீர்மானம் :

என் வேண்டுகோள். இந்தக் கேள்வி நேரம் நடக்கும்போது, அந்தத் துறையின் செயலாளர்கள் இந்த அவைக்கு வரவேண்டும். அவர்கள் அதை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதையும் நீங்கள் வலியுறுத்த வேண்டும். அதேபோல, கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்துள்ளோம். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொடுத்துள்ளார்கள். ஆனால், நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாகவே, ஒரு அமைச்சர் அவர்கள் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். அதையும் நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.

உடனே கரூர் சம்பவத்துடன் ஒப்பிடுகிறீர்கள். எனவே, அது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், கரூர் சம்பவம் நடக்கும்போது, இங்கு அவையில் முதலமைச்சர் அவர்களே இருந்து பதில் சொன்னார்கள். இப்போது முதலமைச்சர் அவர்களும் இல்லை, தலைமைச் செயலாளர் அவர்களும் இல்லை. எனவே, இதையெல்லாம் நீங்கள் கவனத்தில்கொண்டு துறை பிரச்சினை வரும்போது, அந்தந்தத் துறையின் அதிகாரிகள் இங்கு இருக்க வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories