தமிழ்நாடு

தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?

தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் த.வெ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்த காவல் மரணங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4-க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நடந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் சபரிவர்மன், தூத்துக்குடியில் அருணாச்சலம், சென்னை புழல் சிறையில் பாலாஜி அதேபோல் வெங்கடேசன் ஆகியோர் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த விவகாரங்களில் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ” தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?

எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?

Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories