தமிழ்நாடு

முதியவரைக் காரில் கடத்தித் தாக்கிய த.வெ.க நிர்வாகி : வீடியோ வெளியாகிப் பெரும் கொந்தளிப்பு!

முதியவரை தாக்கி வீடியோ வெளியிட்ட த.வெ.க நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரைக் காரில் கடத்தித் தாக்கிய த.வெ.க நிர்வாகி : வீடியோ வெளியாகிப் பெரும் கொந்தளிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியப் பகுதியில் முதியவர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க சீர்காழி ஒன்றியத் துணைச் செயலாளரான 'ஜில்லா மணி' என்பவர், முதியவர் ஒருவரைக் காரில் கடத்தி ஈவு இரக்கமின்றித் தாக்கியுள்ளார். மேலும், அந்தத் கொடூரச் செயலைத் தன் கைபேசியில் வீடியோ மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததாகக் கூறப்படும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளன.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் நிலையில், வயதுக்கோ அல்லது அரசியல் பின்னணிக்கோ அப்பாற்பட்டு, இந்த வன்முறையில் ஈடுபட்ட நபர் மீது மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறை உடனடியாக உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கை வெறுமனே ஏடுகளில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் காக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட முதியவருக்கு உடனடியாக நீதி கிடைக்கச் சட்டரீதியான விரைவு நடவடிக்கை தேவை என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

banner

Related Stories

Related Stories