தமிழ்நாடு

ரூ.100 கோடி பழனி கோவில் முறைகேடு விவகாரம்: மூடி மறைக்கும் தவெக அரசு - முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!

திரைக்கவர்ச்சி மூலம் ஆட்சிக்கு வந்த த.வெ.க Fake ஆட்சியின் வேஷம் கலையத் தொடங்கி விட்டது.

ரூ.100 கோடி பழனி கோவில் முறைகேடு விவகாரம்: மூடி மறைக்கும் தவெக அரசு - முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க. ஆட்சியில் ஊழலே நடக்காது என்று மேடைக்கு மேடை மைக் போட்டு முழங்கி வருகிறார் முதலமைச்சர் விஜய். ஆனால், அவரது தலைமையிலான ஆட்சியிலேயே ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதற்குச் சான்றுதான் பழநி கோவிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி சொத்து அபகரிப்பு விவகாரமாகும்.

இந்நிலையில், திரைக்கவர்ச்சி மூலம் ஆட்சிக்கு வந்த த.வெ.க-வின் போலி ஆட்சியின் வேஷம் கலையத் தொடங்கிவிட்டது என முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் "

த.வெ.க என்ற கட்சியை தொடங்கி இரண்டு ஆண்டுகளாக தளபதி மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் ஆட்சிக்கு எதிராக பொய் செய்திகளை Reels களாக்கி 2 லட்சம் Fake Id-களை உருவாக்கி Instagram, WhatsApp, YouTube, Facebook, X-தளம் வழியாக மக்களிடம் பரப்பி அதன் மூலம் இந்த Fake ஆட்சி உருவானது...

MLA-க்கள் கடத்தல் ,குதிரைபேரம் ஆகியவற்றின் உதவியோடு இந்த Fake ஆட்சி அமைந்த நாள் முதல் போதை பொருட்கள் கடத்தல், விற்பனை , சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, காவல் மரணங்கள், சிறை மரணங்கள், டாஸ்மாக் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூல், விவசாயிகளிடம் நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு 40 ரூபாய் வசூல், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் என்று அலங்கோலங்கள் அரங்கேறி வருகின்றன. அதன் உச்சமாக பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ருபாய் சொத்து அபகரிப்பு விவகாரம் அம்பலமானதும் அதனை மூடி மறைக்க முயற்சித்து அது முடியாமல் தோற்றுப் போனது இந்த அரசு...

பழனி கோயில் நில அபகரிப்புக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் ஜஸ்டீன் மணிகண்டன், பாலசுந்தர், மாரிமுத்து, நில விற்பனை செய்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, மற்றும் சேதுபதியை கைது செய்வத்றகு பதிலாக பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள்

மாரிதாஸ், இந்திராணி, வினோத், மற்றும் விஜயன் போன்றோரை நள்ளிரவில் கைது செய்து திசை திருப்பும் செயலில் இறங்கி உள்ளது இந்த Fake ஆட்சி...

நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர், பத்திர பதிவுத்துறையின் மேல் அதிகாரிகளின் அழுத்தத்தால், பழனி சார் பதிவாளர் விடுமுறையில் சென்றதாக நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார், அப்படியானால் அந்த அழுத்தம் கொடுத்த Sir யார், CMsir ? திரைக்கவர்ச்சி மூலம் ஆட்சிக்கு வந்த இந்த Fake ஆட்சியின் வேஷம் கலையத் தொடங்கி விட்டது ..மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாந்து போன இளைஞர்கள் கொந்தளிக்க தொடங்கி இருப்பதே அதற்கு சாட்சி” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories