
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பனையூர் பாபு தன்னை தி.மு.க கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும் ல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், ”செய்யூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு மற்றும் அவருடன் வந்த ஆதரவாளர்களை தி.மு.க சார்பில் வரவேற்கிறேன்.இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளில் ஒருவராக, உங்களை நினைத்துக் கொள்ள வந்திருக்கும் அனைவரையும் இயக்கத்தின் முதன்மை தொண்டனாக, மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
பனையூர் பாபுவை பற்றி சொல்ல வேண்டுமானால், கடந்த ஐந்து வருடமாக சட்டமன்றத்தில் தொடர்ந்து கவனித்திருக்கிறேன். சட்டமன்றத்திற்கு அமைதியாக வந்து செல்வார். ஆனால் சட்டமன்றத்தில் பேசும்போது தனது தொகுதிக்கான பிரச்சனைகளை ஆக்கபூர்வமாக வலியுறுத்தி பேசக்கூடியவர்.
கொள்கைவாதியாக லட்சியவாதியாக ஒரு போராளியாக, தனது கருத்துக்களை முன்வைத்து பேசக்கூடியவர். பொதுவாக சிலர் ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறும் போது மற்றொரு இயக்கத்திற்கு சேரும்போது கொஞ்சம் யோசித்து ( தரம் தாழ்ந்து பேசும் பானியை கூட பார்த்து இருக்கிறோம்)
ஆனால் பனையூர் பாபு அரசியல் பண்புடன் அடக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.கொண்ட கொள்கைக்காக உறுதியுடன் உழைக்கக்கூடிய ஒரு செயல்வீரர் தான் பனையூர் பாபு. அதற்கு அவருடைய அரசியல் பயணமே சாட்சி.
2007 ல் விசிக, வில் சேர்ந்து ஒவ்வொரு நிலையாக உயர்ந்து செய்யூர் சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தவர்.
திராவிட மாடல் ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு சொன்னார். தனது தொகுதி மக்களுக்காக அந்தப் பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆதிதிராவிட மக்களின் நலனுக்காக கோரிக்கைகளை முன்வைத்ததாக அதை நிறைவேற்றி தந்ததாக கூறினார்.
இமானுவேல் சேகரனுக்கு நினைவு மண்டபம் அமைத்தது நமது அரசு. இரட்டை மலை சீனிவாசனுக்கு மணிமண்டபம், நந்தனம் எம்.சி ராஜா மாணவர் விடுதி உள்ளிட்ட ஏராளமானவற்றை திமுக செய்ததாக கழக தலைவர் பேசினார்.
இப்படி பல்வேறு சாதனைகளை நாங்கள் செய்தால் அதற்கு காரணம் பனையூர் பாபு தான்.என்றென்றும் பெரியாரும் அண்ணாவும் நமக்கு வகுத்துக் கொடுத்த கொள்கைகளை, அறிக்கையாக கொடுத்தவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று பனையூர் பாபு தனது அறிக்கையில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார். திமுகவை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான் வேலை அதிகமாக இருக்கும்.
இப்படியான சூழலில் உழைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று துணையாக வந்து சேர்ந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.யாரையும் குறைத்து மதிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை.
நிச்சயமாக இன்றைக்கு நாட்கள் நடந்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்று சொல்ல வேண்டியது இல்லை. ஆறு மாதத்திற்கு எதுவும் பேசப்போவதில்லை என்று இருந்தோம். ஆனால் அதற்கு முன்பே அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் வந்துவிட்டது. " என தெரிவித்துள்ளார்.






