தமிழ்நாடு

“அநாகரிகமான பேச்சு” : அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சாடல்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் ஆணவப் பேச்சிற்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அநாகரிகமான பேச்சு” : அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திடீர்ப் பொறுப்பிற்கு வந்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தனது பதவியின் கண்ணியத்தை மறந்து பேசுவது அநாகரிகமானது என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,தி.மு.கவிற்கும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் சவால் விட்டு

ஆணவமாக பேசியுள்ளார். இந்த பேச்சிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் எட்டு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வருமாம். தில் இருந்தால் தையிரியமிருந்தால் 25 மேயர் பதவியில் ஒரு மேயர் பதவியை வெற்றி பெற்று காட்டுங்கள் என ஆணவமாக எங்கள் இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சவால் விடுத்து பேசியுள்ளார்.

திடீர் பொறுப்பிற்கு வந்த அமைச்சர் தனது பதவியின் கண்னியத்தை மறந்து தில், தையிரியம் என்றெல்லாம் பேசுவது அநாகரிமானது நாங்கள் தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக சொல்கிறோம் உள்ளாட்சி

மன்ற தேர்தலில் ஒரு மேயர் பொறுப்பு மட்டுமல்ல அனைத்து மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற பொறுப்புகளை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வென்று காட்டுவோம்.நாங்கள் வெற்றிபெற்றால் அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அரசியலில் இருந்து விலகி விடுவீர்களா?” என கேள்வி எழுப்பி உள்ளார்

banner

Related Stories

Related Stories