தமிழ்நாடு

”பல்கலை. வேந்தராக முதலமைச்சர்.. திமுக-வின் சட்டப் போராட்டம்.. காங்கிரஸ் அமைச்சரின் அசட்டைப் பேச்சு”

பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்க பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி கடந்த திமுக ஆட்சியில் பெற்ற உரிமையை மீண்டும் பாஜக-வின் கைகளுக்கு அனுப்ப போராடுகிறது தவெக அரசு.

”பல்கலை. வேந்தராக முதலமைச்சர்.. திமுக-வின் சட்டப் போராட்டம்..  காங்கிரஸ் அமைச்சரின் அசட்டைப் பேச்சு”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

2022 ஏப்ரல் 25ம் தேதி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாக்கள் உட்பட தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 முக்கிய மசோதாக்களுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல், ஆளுநர் ஆர்.என்.ரவி அவற்றை அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களையும் எவ்வித மாற்றமும் இன்றி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் அவசரக் கூட்டத்தொடரைக் கூட்டி, மீண்டும் அதே தீர்மான வடிவில் தமிழ்நாடு அரசு ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு மறுபடியும் அனுப்பி வைத்தது.

2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இரண்டாவது முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் அவற்றை தன் வசம் வைத்திருக்காமல், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

”பல்கலை. வேந்தராக முதலமைச்சர்.. திமுக-வின் சட்டப் போராட்டம்..  காங்கிரஸ் அமைச்சரின் அசட்டைப் பேச்சு”

2025ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அமர்வு, 2025 ஏப்ரல் 8 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை வழங்கியது.

ஆனால் இன்று பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாடு அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என காங்கிரஸைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டியளித்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பாஜகவின் குரலைப் பிரதிபலித்துள்ளார்.

தொடர்ந்து மும்மொழிக்கொள்கையைப் பரிசீலிப்போம், பல்கலை. வேந்தராக முதலமைச்சர் என்ற கொள்கை முடிவைப் பரிசீலிப்போம் என தமிழ்நாட்டின் கொள்கைகளை அடகுவைத்து பாஜகவின் திட்டத்தை நிறைவேற்றவே இந்த தவெக அரசு துடிக்கிறது என்பது அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

banner

Related Stories

Related Stories