தமிழ்நாடு

”பல்கலை. வேந்தர் பதவி.. பாஜகவிற்கு ஒத்து ஊதும் காங்கிரஸ்” : திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி கண்டனம்!

தமிழ்நாடு போராடிப் பெற்ற உரிமையான பல்கலைக்கழக வேந்தர் பதவியில் ஆளுநரே இருக்கலாம் என்ற காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

”பல்கலை. வேந்தர் பதவி.. பாஜகவிற்கு ஒத்து ஊதும் காங்கிரஸ்” : திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு;

அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் “ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.

”பல்கலை. வேந்தர் பதவி.. பாஜகவிற்கு ஒத்து ஊதும் காங்கிரஸ்” : திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி கண்டனம்!

’ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரே பல்கலைக்கழக வேந்தராக தொடரலாம்‘ என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது, பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

banner

Related Stories

Related Stories