தமிழ்நாடு

”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”

இந்தியாவில் முதன்முறையாக நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத  ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

நீலகிரி மாவட்டத்தில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மிக முக்கிய உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இயறிகை வளங்களால் நிரம்பியுள்ள தனித்துவமான தாவரங்கள் மற்றும் அரிய வகை விலங்கினங்களுக்கு உறைவிடமாக நீலகிரி திகழ்கிறது. இதனால் அவ்வப்போது புதிய உயிரினங்கள் அரிய வகை பூச்சி இனங்கள் கண்டறியப்படுகிறது.

அந்த வகையில் தற்போது நீலகிரியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வுக் குழுவினர், மிகவும் சிறப்பு வாய்ந்த, குறுகிய இறக்கைகளைக் கொண்ட பறக்காத ஒட்டுண்ணி வகையை சேர்ந்த ஈ யான 'மயோப்தீரியா ஸெய்லானிகா' (Myophthiria zeylanica) இருப்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர். இது இந்தியாவில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்வாகும்.

இதன்படி நீலகிரியைச் சேர்ந்த ஒபோனா, சாம்சன், ரிஷி, அபினேஷ், விக்னேஷ், சரண், ஷாஹிர், மொய்னுதீன் மற்றும் காமில் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்டறிந்த இந்த உயிரினம் தற்போது சர்வதேச இதழில் வெளியிடப்பட்டுள்ளது இது குறித்து ஆய்வு குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள யூகலிப்டஸ் மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட, இறந்த நிலையில் இருந்த ஒரு இந்திய ஸ்விட்ப்லெட் பறவையிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரே ஒரு பெண் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத  ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”

இந்த ஆய்வு மே 4 அன்று ஒரு சர்வதேச இதழில் வெளியிடப்பட்டது. 'மயோப்தீரியா' பேரினம் அதன் மிகவும் சிறப்பு வாய்ந்த உருவமைப்பிற்காக அறியப்படுகிறது. இந்த ஈக்கள் அகலத்தை விட நீளமான தலையையும், கணிசமாகச் சுருங்கிய கண்களையும் (தலையின் நீளத்தில் சுமார் ஏழில் இரண்டு பங்கு) கொண்டுள்ளன, மேலும் இவற்றில் ஒசெல்லி (ocelli) எனப்படும் கண்மணிகள் இல்லை.

அவற்றின் இறக்கைகள், எளிமையான நரம்பமைப்பைக் கொண்ட திண்டு போன்ற அமைப்புகளாகச் சுருங்கியுள்ளன, இது அவற்றின் ஒட்டுண்ணி வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது. “இந்தியாவிலிருந்து மயோப்தீரியா ஸெய்லானிகாவின் முதல் பதிவை ஆவணப்படுத்துவதும், இந்த இனம் குறித்த அடிப்படைத் தரவுகளை வழங்குவதும் இந்த ஆய்வின் நோக்கமாகும்.

இந்த வகை பூச்சியினம் இனம் முன்னர் இலங்கைக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டது.

பழைய உலகின் பெரும்பாலான இனங்கள் 600 மீட்டருக்கும் குறைவான தாழ்நிலப் பகுதிகளில் காணப்படும் நிலையில், எம்.ஸெய்லானிகா ஒரு விதிவிலக்காகும். இது 1,520 மீட்டர் வரையிலான உயர்நிலப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நாங்கள் நீலகிரியில் 2,238 மீட்டர் உயரத்தில் இதை ஆவணப்படுத்தியுள்ளோம்,

இந்தக் கண்டுபிடிப்பு, அரிதாகக் காணப்படும் சிட்டுக்குருவிகளுடன் தொடர்புடைய ஒட்டுண்ணி ஈயின் பரவல் குறித்த புதிய தரவுகளை அளிப்பதோடு, நீலகிரியின் உயரமான மலைப்பகுதி வாழ்விடங்களின் சூழலியல் முக்கியத்துவத்தையும், அங்குள்ள உயிரினங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories