தமிழ்நாடு

2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!

எதிர்க்கட்சியாக சட்டமன்றம் செல்லும் திராவிட முன்னேற்றக் கழகம்!

2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பல திருப்பங்களுடன் நிறைவடைந்துள்ளது. “மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்” என உருக்கத்துடன் தி.மு.கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது, துவண்டு கிடந்த பொருளாதாரம் மீண்டது, மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, மாநில உரிமைகளுக்கான முழக்கம் ஓங்கியது, சுயமரியாதைமிக்க சமூகம் வளர்ந்தது, மாணவர்களின் சுமை நீங்க பல முத்தாய்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என சொல்லிக்கொண்டே சென்றாலும்...

களத்தில் மக்களை சந்தித்திடாத, விமர்சனங்களுக்கு பதிலளிக்க முன்வராத, ஊடகங்களை சந்திக்க தயங்கிய மனநிலை கொண்ட ஒருவரை பெரும்பான்மை மக்கள், தங்களது மாநில முதன்மை நிகராளியாக (பிரதிநிதியாக) தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாக அமைந்துவிட்டது.

தங்களது தொகுதி வேட்பாளர்கள் யாரென்றே அறியாமல், வெறும் சின்னத்தைக் கண்டு வாக்களித்து சென்றிருக்கிறார்கள் பெரும்பான்மை மக்கள் என்பதும் வெளிப்பட்டு வருகின்றன.

இதற்கு காரணம், சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட வெறுப்பும், உண்மைக்கு மாறான தரவுகளும்தான் என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பினும்; தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, அதற்கான முடிவும் வெளியாகிவிட்டது என்பதோடு நாம் அடுத்தக்கட்ட தமிழ்நாட்டின் பயணத்தை எதிர்நோக்கி செல்கிற கட்டாயத்தில் இருக்கிறோம்.

2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க இருக்கிற அரசு செய்யும் தவறுகளையும், அதன் அலட்சியப் போக்கையும் சுட்டிக்காட்ட ‘தி.மு.க’ என்ற வலுவான கட்டமைப்பும், கருத்தியல் தெளிவும் கொண்ட இயக்கம் சட்டமன்ற எதிர்க்கட்சியாக அமைய இருப்பது ஓரளவு நம்பிக்கையை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இப்படியான நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று 59 கழக உடன்பிறப்புகள், சட்டமன்றம் செல்ல இருக்கின்றனர்.

அவர்களின் விவரம் பின்வருமாறு,

வெற்றி தொகுதிகள் - தி.மு.க வேட்பாளர்கள்

1. கூடலூர் - திராவிடமணி

2. திருச்சி மேற்கு - கே.என்.நேரு

3. குன்னூர் - கே.எம்.ராஜூ

4. வால்பாறை (தனி) - சுதாகர்

5. பாளையங்கோட்டை - அப்துல் வகாப்

6. அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர்.இளங்கோ

7. திருவாரூர் - பூண்டி கலைவாணன்

8. ஒட்டன்சத்திரத்தில் - சக்கரபானி

9. மடத்துக்குளம் - இரா.ஜெயராமகிருஷ்ணன்

10. கோவை தெற்கு - வி.செந்தில்பாலாஜி

11. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்

12. ராமநாதபுரம் - காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்

13. உடுமலைப்பேட்டை - மு.ஜெயகுமார்

14. வந்தவாசி - எஸ்.அம்பேத்குமார்

15. துறைமுகம் - பி.கே.சேகர்பாபு

2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!

16. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்

17. திருமயம் (தனி) - எஸ்.ரகுபதி

18. திருமங்கலம் - மு.மணிமாறன்

19. கோவில்பட்டி - கா.கருணாநிதி

20. திருவையாறு - துரை சந்திரசேகரன்

21. நாகர்கோவில் - எஸ்.ஆஸ்டின்

22. ஆலங்குடி - சிவ.வீ.மெய்யநாதன்

23. முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்

24. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்

25. விழுப்புரம் - லட்சுமணன்

26. குன்னம் - சா.சி.சிவசங்கர்

27. மண்ணச்சநல்லூர் - கதிரவன்

28. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

29. திருவண்ணாமலை - எ.வ.வேலு

30. அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

31. திருச்சுழி - தங்கம் தென்னரசு

32. வேடசந்தூர் - டி.சாமிநாதன்

33. திட்டக்குடி - சி.வி.கணேசன்

2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!

34. புதுக்கோட்டை - வை.முத்துராஜா

35. ஆத்தூர் - இ.பெரியசாமி

36. திண்டுக்கல் - ஐ.பி.செந்தில்குமார்.

37. தென்காசி - கலை கதிரவன்

38. ஆலங்குளம் - பால் மனோஜ்பாண்டியன்

39. பேராவூரணி - என். அசோக்குமார்

40. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்

41. பரமக்குடி - கே.கே.கதிரவன்

42. திருவிடைமருதூர் - கோவி செழியன்

43. அரவக்குறிச்சி - பி.ஆர்.இளங்கோ

44. வேப்பனஹள்ளி - பி.எஸ்.சீனிவாசன்

45. ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்

46. ஆம்பூர் - அ.செ.வில்வநாதன்

47. ஆண்டிப்பட்டி - ஆ.மகாராஜன்

48. பட்டுக்கோட்டை - அண்ணாதுரை

9. உளுந்தூர்பேட்டை - வசந்தவேல்

50. குளித்தலை - சூரியனூர் சந்திரன்

51. வாசுதேவநல்லூர் - ராஜா

52. சாத்தூர் - கடற்கரை ராஜ்

53. வானூர் - கெளதம்

54. பூம்புகார் - நிவேதா எம்.முருகன்

வெற்றி தொகுதிகள் - ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டணி வேட்பாளர்கள்!

55. பொள்ளாச்சி - நித்யானந்தன்

56. சீர்காழி - செந்தில் செல்வன்

57. சிதம்பரம் - தமிமுன் அன்சாரி

58. நாகப்பட்டினம் - ஜவாஹிருல்லா

59. கடையநல்லூர் - ராஜேந்திரன்

banner

Related Stories

Related Stories