தமிழ்நாடு

கோடை வெப்பத்தைத் தணிக்கச் சட்டைப் பையில் வெங்காயம் : ஒன்றிய அமைச்சரின் மூடநம்பிக்கை!

கோடை வெப்பத்தை தணிக்க வெங்காயத்தை சட்டையில் வைத்துக்கொள்ளுங்கள் என ஒன்றிய அமைச்சரின் மூடநம்பிக்கை பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

கோடை வெப்பத்தைத் தணிக்கச் சட்டைப் பையில் வெங்காயம் : ஒன்றிய அமைச்சரின் மூடநம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வெப்பத்தைத் தணிக்க இளநீர், நுங்கு, பழச்சாறுகள் ஆகியவற்றை மக்கள் நாடி வருகின்றனர். வரும் நாட்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க உங்கள் சட்டைப் பையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார்.

மேலும், தான் காரில் செல்லும்போதும் அல்லது தங்கியிருக்கும் இடங்களிலும் குளிர்சாதன வசதியை பயன்படுத்துவதில்லை என்றும், இந்த வெங்காய முறையே தனது ஆரோக்கியத்தின் ரகசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லாத அமைச்சரின் இந்தப் பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories