
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைவதை அடுத்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கொளத்தூர் தொகுதியில் திறந்த வெளி ஜீப்பில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மேலும் , கடந்த 5 ஆண்டில் கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட மற்றாங்களை பட்டியலிட்டார். தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்துவிட்டு கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.






