தமிழ்நாடு

விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!

சினிமாவில் காட்டிய திறமையைப் பார்த்து மக்கள் வைத்த அன்பைத் தற்போது அரசியலில் பயன்படுத்த விஜய் நினைக்கிறார்.

விஜய்  தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய நடிகர் பிரகாஷ்,”இந்த சட்டமன்ற தேர்தல் மூன்று 'மாடல்களுக்கான' தேர்தல். ஒன்று திராவிட மாடல். மற்றொன்று அடிமை மாடல் அடுத்து சினிமா மாடல். திராவிட மாடல் மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தது; இந்தியாவிலேயே ஒரு மாநிலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பெருமையைச் சேர்த்தது; மொழி மானத்தைக் காப்பாற்றியது; தற்போது இன மானத்தைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், அடிமை மாடல் தன்மானத்தையும் சுயமரியாதையையும் தூக்கிக்கொண்டு போய் மோடியின் காலில் போட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கும் வகையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு தற்போது கொண்டு வருகிறது. இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை மாடல் வாய்மூடி மௌனமாக உள்ளது. இத்தகைய அடிமை மாடல் நமக்குத் தேவையா?" என மக்களை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

அடுத்து'சினிமா மாடல்' "சினிமாவில் ஒரே படத்தில் மருத்துவராகலாம், பொறியாளராகலாம், ஏன் முதல்வராகக் கூட ஆகலாம். ஆனால் அரசியலில் எடுத்தவுடனேயே முதல்வர் ஆகிவிட முடியுமா?" "என்னுடைய அளவிற்கு விஜய் அரசியல் பேசியுள்ளாரா?

தமிழ்நாட்டு மக்களுக்கோ, மொழிக்கோ அல்லது தன்மானத்திற்கோ பிரச்சினை வந்தபோது அவர் போராட்டக் களத்திற்கு வந்துள்ளாரா? சினிமாவில் காட்டிய திறமையைப் பார்த்து மக்கள் வைத்த அன்பைத் தற்போது அரசியலில் பயன்படுத்த விஜய் நினைக்கிறார்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories