தமிழ்நாடு

தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு Out of Control என்பதை மீண்டும் நிரூபிப்போம்: துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு

தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் இந்த தேர்தல் என திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு Out of Control என்பதை மீண்டும் நிரூபிப்போம்: துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு தனது தேர்தல் பிரச்சாரத்தைத் நேற்று (பிப்.30) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.

இதையடுத்து காங்சிபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் நித்யா சுகுமார், வந்தவாசி தொகுதி வேட்பாளர் அம்பேத்கர், கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்பாளர்கு.பிச்சாண்டி ஆகியோரை ஆதிரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து, துணை முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “எப்போதும் எதிலும் வல்லவர் எ.வ.வேலு. எதை செய்தாலும் கச்சிதமாக முடிக்கக்கூடியவர். தலைநகர் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை திராவிட மாடல் ஆட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட பெருமைமிகு கட்டிடங்கள் அனைத்திலும் அண்ணன் எ.வ. வேலு அவர்களின் பணி அளப்பரியது.

2021 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். கடந்த தேர்தலில் 95,000 வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் எ.வ.வேலு அவர்களை வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

ஜாடிக்கு ஏத்த மூடி என சொல்வதைப் போல, மோடிக்கு ஏத்த அடிமையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க-வின் முரட்டு அடிமையை விரட்டியடிக்கக் கூடிய தேர்தல்தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல். இந்த தேர்லில் தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு Out of Control என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு Out of Control என்பதை மீண்டும் நிரூபிப்போம்: துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு

திராவிட மாடல் ஆட்சியின் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். மக்களின் முடிவுகளை தலைவணங்கும் வகையில், பல்வேறு புதிய அறிவிப்புகளும் உதவித்தொகைகள் அதிகரித்தும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்!” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரூர் தொகுதி தி.மு.க அ.சண்முகம் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது,” ரூ.8,000 மதிப்பிலான ‘இல்லத்தரசி’ கூப்பன், ஐந்தாண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள்,மாதம் ரூ. 2,000 ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, இளைஞர்களுக்கு 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்,விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத விலையில்லா புதிய நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் உள்ளிட்ட திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றப்படும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதற்கடுத்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் பெ.பழனியப்பன் , பாலக்கோடு தொகுதி வேட்பாளர் டி.என்.வி.செந்தில்குமார், தளி தொகுதி சிபிஐ வேட்பாளர் ராமச்சந்திரன் வேப்பனப்பள்ளி வேட்பாளர் பி.எஸ். சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

banner

Related Stories

Related Stories