தமிழ்நாடு

5 மாவட்டங்கள், 32 தொகுதிகள்.. வெளியானது முதலமைச்சரின் முதல்கட்ட பிரச்சார அட்டவணை: - முழு விவரம் உள்ளே!

திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக மார்ச் 31 முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், இதற்கான முதல்கட்ட பிரச்சார அட்டவணை வெளியாகியுள்ளது.

5 மாவட்டங்கள், 32 தொகுதிகள்.. வெளியானது முதலமைச்சரின் முதல்கட்ட பிரச்சார அட்டவணை: - முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில், திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் திமுக தனித்து உதயசூரியன் சின்னத்தில் 164 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 11 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் என மொத்தம் 175 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

திமுக சார்பில் போட்டியிடும் 164 வெற்றி வேட்பாளர்களையும் நேற்று (மார்ச் 28) அறிவித்தார் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து, திமுக-வின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். அதன்படி இதற்கான முதல்கட்ட பிரச்சார அட்டவனையை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

5 மாவட்டங்கள், 32 தொகுதிகள்.. வெளியானது முதலமைச்சரின் முதல்கட்ட பிரச்சார அட்டவணை: - முழு விவரம் உள்ளே!

மார்ச் 31ம் தேதி மாலை 5 மணிக்கு, திருவாரூர் தெற்கு ரத வீதியிலிருந்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருவாரூர் தெற்கு ரத வீதியில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் மற்றும் மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

இதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 1ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், மணப்பாறை, முசிறி மற்றும் துறையூர் தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதே நாள் மாலை 5 மணிக்கு கரூர் ராயனூர் பகுதியில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் கழக வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பின்னர், ஏப்ரல் 2ம் தேதி காலை 9 மணிக்கு ஈரோடு, சித்தோடு பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு கிழக்கு மற்றும் பவானி தொகுதிகளின் தி.மு.க வேட்பாளர்களுக்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

5 மாவட்டங்கள், 32 தொகுதிகள்.. வெளியானது முதலமைச்சரின் முதல்கட்ட பிரச்சார அட்டவணை: - முழு விவரம் உள்ளே!

அதே நாள் மாலை 5 மணிக்கு கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சூலூர், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிகளின் தி.மு.க வேட்பாளர்களுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திமுக-வின் 164 தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுள்ளதால், கழகத்தின் பிரச்சாரப் பயணம் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மிக வெற்றிகரமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories