தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தல் : கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு -தி.மு.க அறிவிப்பு!

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 7 பேர் கொண்ட குழுவை கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் : கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு -தி.மு.க அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில், சட்டமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவை அண்மையில் கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி MP தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், டி.கே.எஸ்.இளங்கோவன், முனைவர் கோவி.செழியன், முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முனைவர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம், சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். வேகவேகமாக தி.மு.கவின் தேர்தல் அறிக்கை பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 7 பேர் குழுவை கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான இக்குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories