தமிழ்நாடு

“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை ஏழை பெண்களுக்கு எதிரானதாகும்” : மு.வீரபாண்டியன் கண்டனம்!

மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டதை கொச்சைப் படுத்துவது கண்டனத்திற்குரியது CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை ஏழை பெண்களுக்கு எதிரானதாகும்” : மு.வீரபாண்டியன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டதை கொச்சைப் படுத்துவது கண்டனத்திற்குரியது CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தேர்தலைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டு மகளிருக்கு மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத்தொகையை முடக்க சில சக்திகள் முயன்றன எனத் தெரிகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய குடும்பங்கள் பாதித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட்டார்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரத்தையும், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரத்தையும் சேர்த்து, ரூபாய் 5 ஆயிரத்தை, 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் பயனாளிகளுக்கு கடந்த 13 ஆம் தேதி வழங்கினார். பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.5000 செலுத்தப்பட்டது.

அடுத்து அமையப்போகும் திமுக ஆட்சியில், இந்த ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை ரூபாய் 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வரவேற்பிற்குரியது.

இந்நிலையில் இத்திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சில தலைவர்கள் கருத்துகளை கூறிவருகின்றனர். இத்தகைய இலவசங்கள் பொருளாதார வளர்ச்சியை கெடுத்துவிடுவதாகவும், வளர்ச்சித் திட்டங்களை எதிர்மறையாக பாதிப்படையச் செய்துவிடுவதாகவும் கூறிவருகின்றனர்.

உழைக்கும் மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் பெண்களுக்கு வழங்கும் எதுவும் இலவசமல்ல. அது அவர்களின் உழைப்பால் விளையும் செல்வாதாரங்களின் ஒரு மிகச் சிறிய பகுதிதான் என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்.

உழைக்கும் மக்களின் உழைப்பே அனைத்து செல்வங்களின் ஊற்றுக் கண். அதை முதலாளிகளின் உலகம் அபகரித்துக் கொள்கிறது. உழைக்கும் மக்களின் உழைப்பால் உருவாகும் உபரி மதிப்பின் ஒரு பகுதியால் தான் அரசு, நிர்வாகம் போன்றவையும் இயங்குகின்றன.

முதலாளிகள் எந்த செல்வாதாரத்தையும், புதிய மதிப்புகளையும் படைப்பதில்லை. ஆனால், தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல் என்ற பெயரில், உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்டச் செல்வாதாரம், மக்களின் பணம் பல லட்சம் கோடி ரூபாய்கள் முதலாளிகளுக்கு வாரி வழங்கப்படுகின்றன.

அவர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்படுகின்றன. அதே சமயம், உழைக்கும் மக்களை பாதிக்கும் மறைமுக வரி அதிகரிக்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் அவர்களுக்கு வாரி வழங்கப்படுகிறது. வன, கடல் வளங்களை கொள்ளையடிக்க முதலாளிகள் அனுமதிக்கப் படுகின்றனர். இன்றைய கூட்டுத் திருட்டு முதலாளித்துவத்தில் மோடி அரசு, முதலாளிகள் பெற்ற பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

முதலாளிகள் இலவசமாக சுருட்டிக் கொள்ளும் இவைப் பற்றி எல்லாம் வாய் திறக்காதவர்கள், முதலாளிகள் நாட்டை கொள்ளையிடுவதை வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்ப்பவர்கள், உழைக்கும் மக்களுக்கு அவர்களின் உழைப்பால் விளைந்த பலனில் ஒரு சிறு பகுதியை வழங்கும் பொழுது அதை இலவசம் என்கின்றனர். நாட்டின் பொருளாதாராமே சரிந்துவிட்டது போல் கூப்பாடு போடுகின்றனர். தங்கள் உரிமையை பெறும் உழைக்கும் மக்களை சிறுமை படுத்துகின்றனர். இவை கடும் கண்டனத்திற்குரியன.

உழைக்கும் பெண்கள், சமூக ரீதியான உற்பத்தி நடவடிக்கைகளில் தங்கள் உழைப்பை செலுத்துவதுடன், இச்சமூகத்தின் எதிர்கால உழைப்புச் சக்திகளான குழந்தைகளை பெற்றல், வளர்த்தல், குடும்ப உறுப்பினர்களை ,முதியோர்களை பாதுகாத்தல், பராமரித்தல் என ஊதியம் தரப்படாத உழைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

அவர்களின் ஊதியம் தரப்படாத உழைப்பிற்கு இச்சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லை. அவர்களின் ஊதியம் தரப்படாத இந்த உழைப்பும் சமூகத்திற்கானதே. அவர்களின் உழைப்பை இச் சமூகம் சுரண்டுகிறது.

அதற்கான ஒரு சிறு நிவாரணமாகத் தான் மகளிர் உரிமைத் தொகை அமைந்துள்ளது. அது பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதை ஒழிப்பதற்கான முழுமையானத் தீர்வல்ல எனினும், சிறு நிவாரணத்தைக் கூட எதிர்ப்பது மனிதநேயமல்ல. அது ஆணாதிக்க மனநிலையாகும். இன்றைய 4 வது தொழில் நுட்பப்புரட்சிக் காலக் கட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, தானியங்கி மயமாதல் போன்றவற்றால் லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் வேலை இழப்பிற்கு ஆளாகின்றனர்.

புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. அதே சமயம் உற்பத்தி அதிகரிக்கிறது. இது மிகை உற்பத்தி நெருக்கடிகளை உருவாக்குகிறது. சமூக முரண்பாடுகளை ,பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது. இதை கவனத்தில் கொண்டே பல வளர்ச்சியடைந்த நாடுகளில் அனைவருக்கும் அடிப்படை வருவாய் (ஹிஸீவீஸ்மீக்ஷீsணீறீ ஙிணீsவீநீ மிஸீநீஷீனீமீ - ஹிஙிமி) என்றத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, பின்லாந்து, பிரேஸில், போன்ற பல நாடுகள் இதை நடைமுறைப்படுத்துகின்றன.

வேலையில் இல்லாதோருக்கும் கூட அந்நாட்டின் அரசுகளால் ஓர் அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அத்தகையத் திட்டத்தை இன்று தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள், பெண்களுக்கு மட்டும் நடைமுறை படுத்துகின்றன. இத்திட்டம் அனைத்து ஏழை பெண்களுக்கும், ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

ஏனெனில் உலகிலேயே இந்தியாவில் தான் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில், யுபிஐ போன்ற, மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை எதிர்ப்பது, கொச்சைப் படுத்துவது என்பது சமூகப் பொறுப்பற்றச் செயலாகும். ஏழை பெண்களுக்கு எதிரானதாகும். அத்தகைய கொச்சைப் படுத்தல்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories