தமிழ்நாடு

“திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையை அடுத்த கிண்டியில் இன்று நடைபெற்ற ‘தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் 71 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியதுடன், 52 தொழில் நிறுவனங்களின் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், முதலமைச்சர் முன்னிலையில் 2 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,” முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் டைடல் பூங்காக்களை அமைத்து ஐடி (IT) துறைக்கு அடித்தளம் இட்டார். அந்த வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது ஐடி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

வரலாற்றில் இல்லாத வகையில் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள் தற்போது மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை அடைந்துள்ளன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்பார்வையில் செயல்படும் 'நான் முதல்வன்' திட்டம், மாநிலத்தின் தொழில்துறைக்குத் தேவையான திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் ரூ.10,43,652 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 33,30,843 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 18 தொழில் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 30 தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக 17 'டைடல் நியோ' (TIDEL Neo) பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

காலணி தயாரிப்பில் தமிழ்நாடு முத்திரை பதித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், செமிகண்டக்டர் (Semiconductor), கப்பல் கட்டும் தொழில் (Ship building), உயிர் அறிவியல் (Life science), விண்வெளி மற்றும் பாதுகாப்பு (Aerospace & Defence) போன்ற நவீனத் துறைகளிலும் புதிய நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories