
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2026 பிப்.17 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை பிப்.17 ஆம் தேதி கூடுகிறது. அன்றே 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை அவையில் வாசிப்பார். பிப்.20 ஆம் தேதி 2025-26-க்கான கூடுதல் செலவுக்கான மாணிய கோரிக்கை அளிக்கப்படும்.
மேலும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடக்கும்” என அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
2026-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது தேர்தலுக்கு முந்தைய இடைக்கால நிதிநிலை அறிக்கையாக அமையும்.






