தமிழ்நாடு

கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!

இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.2.2026) விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற விழாவில், "உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் 10,000 முகாம்கள் நிறைவையொட்டி, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், 1 இலட்சத்து 82 ஆயிரத்து 967  பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித் தொகைகளையும் வழங்கினார்.  மேலும், இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் என் கனவு என் எதிர்காலம்”  என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின்பு,  கடந்த ஐந்து ஆண்டுகளில்,  அனைத்து துறைகளிலும் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

1,82,967 பயனாளிகளுக்கு  சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் வழங்குதல்

சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியங்களின் கீழ், முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம்,  விதவை ஓய்வூதியம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற / கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம்,50  வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக, சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த மனுதாரர்களுக்கும், கள ஆய்வின் அடிப்படையில்,
1.80 இலட்சம் மனுதாரர்களுக்கு (இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம்-1,02,960, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம்-53,764

கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!

ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம்-22,799 உள்ளிட்டவை) ஓய்வூதியம் ஒப்பளிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் 1,82,967 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் அடையாளமாக  8 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கினார். இதனால் அரசுக்கு, ஆண்டொன்றிற்கு, கூடுதலாக சுமார் ரூ.260  கோடி செலவாகும். 

தமிழ்நாட்டில், ஏற்கனவே 33,60,192 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியத்தினை இவ்வரசு வழங்கி வருகிறது.  தற்போது ஒப்பளிக்கப்பட்டுள்ள 1,82,967 பயனாளிகளையும் சேர்த்து, மொத்தமாக 35,43,159 பயனாளிகள் பயன்பெறுவர்.  இத்திட்டத்திற்காக இவ்வாண்டு, 5,295 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“என் கனவு என் எதிர்காலம்” இணையதளத்தை தொடங்கி வைத்தல்

தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிய, அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக கேட்டறிந்து, அதன் அடிப்படையில் புதிய திட்டங்களை தொடங்க, “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 9.01.2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 50,000 தன்னார்வலர்களைக் கொண்டு இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது..

ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளை சேகரிப்பதுடன், இளைய தலைமுறையினரின் எண்ணங்களையும் அறிந்து அவர்களின் கனவுகளை சேகரிக்க, ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தினை செயல்படுத்தி, இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் பொருட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம், ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய, ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற இணையதளத்தினை (http://enkanavu.tn.gov.in) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்தார். பதிவாகும் கனவுகளின் அடிப்படையில், இளைஞர் நலனிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு  அவர்களின் எதிர்கால கனவுகள் நிறைவேற்றப்படும்.

banner

Related Stories

Related Stories