
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.1.2026) சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில், 2,559 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலான 49 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 13 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 28 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 15,453 பயனாளிகளுக்கு 205 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்
காரைக்குடி – அரசு சட்டக் கல்லூரி வளாகக் கட்டடம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரி வளாகக் கட்டடமானது 100 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சட்டக் கல்லூரி வளாகக் கட்டடமானது 19.15 ஏக்கர் பரப்பளவில் நிருவாகம் மற்றும் கல்விக் கட்டடம், கலையரங்கம், முதல்வர் குடியிருப்பு, ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி காப்பாளர் குடியிருப்பு, பெண்கள் விடுதி காப்பாளர் குடியிருப்பு, ஆண்கள் கழிவறை, பெண்கள் கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளாகத்தின் தரைத்தளத்தில் முதல்வர் அறை, அலுவலகம், பதிவு அறை, பொருளாளர் அறை, உடற்கல்வி இயக்குநர் அறை, கலந்தாய்வுக்கூடம், காத்திருப்பு அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அலுவலர் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புதிய உணவு அறை, வகுப்பறைகள், ஆண்கள் கழிவறை, பெண்கள் கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைந்துள்ளது.
முதல் தளத்தில் கருத்தரங்கம், நீதிமன்ற மாதிரிக் கூடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அலுவலர் அறை, வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம், ஆண்கள் கழிவறை, பெண்கள் கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைந்துள்ளது.
இரண்டாம் தளத்தில் நூலகம், நவீன நூலகம், நூலகர் அறை, உதவி நூலகர் அறை, படிப்பறை, புத்தக வைப்பு அறை, மொழி ஆய்வகம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்விளையாட்டு அரங்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓய்வு அறை, ஆண்கள் கழிவறை, பெண்கள் கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைந்துள்ளது. இக்கல்லூரியில், சுமார் 1300 மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்வளத் துறை சார்பில், கள்ளராதினிப்பட்டி, திருமலை, நாமனூர், மேலப்பூங்குடி, சாலூர், சோழபுரம், நாலுக்கோட்டை ஆகிய இடங்களில் 28 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து புதுப்பிக்கப்பட்ட கால்வாய் மற்றும் அதன் கண்மாய்கள், திருப்புவனம் வட்டத்தில் உள்ள கானூர், பழையனூர் மற்றும் 17 கண்மாய்கள் பாசனவசதி பெறும் வகையில் 40 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் வைகை ஆற்றில் குறுக்கே அணைக்கட்டு;
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே பெத்தனேந்தல் சந்திப்பு, சாத்தரசன்கோட்டை-சூராணம் சாலை, சிறுகவயல் – தாழையூர் சாலை ஆகிய இடங்களில் 32 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலங்கள், பையூர்பிள்ளைவயல் முதல் ஆலங்குளம் – கல்குளம் பிரிவு வரையில் 109 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள், இராமநாதபுரம் –
நயினார்கோவில் – அண்டக்குடி – இளையான்குடி – சிவகங்கை – மேலூர் சாலை ஆகிய இடங்களில் 78 கோடி ரூபாய் செலவில் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலைகள்; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2452 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளில் 2119 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் மொத்த கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், காரைக்குடி மாநகராட்சியில் 3 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம்; பள்ளிக் கல்வி துறை சார்பில்,நெற்குப்பை பேரூராட்சி – சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் 97 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைகள்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நெற்குப்பை மற்றும் திருப்புவனம் பழையூரில் 34 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையங்கள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் சீமாங்க் பிரிவுக் கட்டடம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 கோடியே 98 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. இயந்திரம், எம்.கரிசல்குளம் கிராமத்தில் 41 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையம், சாலைக்கிராமத்தில் 350 இலட்சம் ரூபாய் செலவில் வட்டார பொது சுகாதார நிலையம், திருவேகம்பத்தூரில் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் வட்டார பொது சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையக் கூடுதல் கட்டடம், சூராணம் கிராமத்தில் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாங்குளம் ஊராட்சி – மூங்கிலூரணி மற்றும் காரையூர் ஆகிய இடங்களில் 18 கோடியே 64 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் இலங்கைத் தமிழர்களுக்கான தொகுப்பு வீடுகள், சாலைக்கிராமத்தில் 1 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், பொன்னியேந்தலில் 44 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடம், இலங்குடி, இராயன்பட்டினம், அனுமந்தகுடி, கண்ணங்குடி, ஜெயங்கொண்டான், ஆம்பக்குடி ஆகிய இடங்களில் 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் நேரடி கொள்முதல் மையங்கள், பெரியாமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் புளியங்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 60 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள், தேவரிப்பட்டி, நேமம், பி.முத்துப்பட்டினம், கம்பனூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடங்கள்;
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சிவகங்கை, காரைக்குடி ஆகிய இடங்களில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகங்களில் 47 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள், மானாமதுரை, தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, திருப்புவனம், காரைக்குடி, கல்லல் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில் 99 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், கல்லல் வட்டாரத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம்;என மொத்தம், 2,559 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலான 49 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், சிவகங்கை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 3 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1500 மெ.டன். கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்புக் கிடங்கு; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், உழவூரணியில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாடக மேடை, வேம்பணியில் 5 இலட்சத்து ‘50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உணவருந்தும் கூடம், ஜெயங்கொண்டானில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்மாய் படித்துறை அமைக்கும் பணிகள், பெரியகோட்டை – பில்லங்குடி மாரியம்மன் கோவில் அருகில் 450 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுவர் கட்டும் பணிகள், ஆம்பக்குடியில் 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, சாக்கவயல், முள்ளிக்குண்டு விலக்கு ஆகிய இடங்களில் 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியற் நிழற்குடை, மத்திராவயலில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்டக்குடி வண்ணானேந்தல் கண்மாயில் படித்துறை அமைக்கும் பணிகள், நாரணமங்களத்தில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கலையரங்கம், பிரான்மலையில் 97 இலட்சத்து 28ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம்;
பாதரக்குடியில் 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைப் பணிகள், காரையூர், கருப்பூர், காப்பாரபட்டி, கோபாலபச்சேரி, எஸ்.கோவில்பட்டி, சந்திரப்பட்டி, எருமைப்பட்டி, ஜீவாநகர், ஜெயம்கொண்டநிலை, மல்லாக்கோட்டை, அ.காளாப்பூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள், பாப்பா ஊரணியில் 29 இலட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர், கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விழா மேடை, விசாலன்கோட்டை, பனங்குடி ஆகிய ஊராட்சிகளில் 3 கோடியே 25 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்;
என மொத்தம், 13 கோடியே 35 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 28 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 2,600 பயனாளிகளுக்கு நத்தம் விலையில்லா வீட்டுமனைப் பட்டா, வகைப்பாடு மாற்றம் செய்து வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பினை வரன்முறைப்படுத்தி ஒரு முறை சிறப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பட்டா, மனை வாடகை பிரிவு பட்டா, சிறப்பு வரன் முறை திட்டத்தின் கீழ் பட்டா, இணைய வழி பட்டாக்கள், விபத்து நிவாரண நிதி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை போன்றவற்றின் கீழ்பல்வேறு உதவிகள்;
கூட்டுறவுத் துறை சார்பில், 2,852 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு, மகளிர் சுய உதவிக் குழுக் கடன், மத்திய காலக் கடன், மாற்றுத் திறனாளி கடன், டாம்கோ கடன், சம்பளக் கடன், பண்ணை சாராக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் போன்ற பல்வேறு உதவிகள்;
உயர் கல்வித் துறை சார்பில், 1,659 பயனாளிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினி உதவிகள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 1000 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் உதவிகள், மகளிர் திட்டம் சார்பில், 54,099 பயனாளிகளுக்கு வங்கிக் கடன், சமுதாய முதலீட்டு நிதி, வட்டார வணிக கடன் நிதி போன்ற பல்வேறு உதவிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 1065 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் உதவிகள்; தொழிலாளர் நலத் துறை சார்பில், 700 நபர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, ஓய்வூதியம் போன்ற பல்வேறு உதவிகள், மாவட்ட தொழில் மையம் சார்பில், 179 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டம், கலைஞர் கைவினை திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 100 பயனாளிகளுக்கு சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் சார்பில், 381 பயனாளிகளுக்கு அன்புக்கரங்கள் திட்டம், மிஷன் வட்சால்யா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 147 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, நியோ போல்ட், மூன்று சக்கர சைக்கிள், நவீன வாசிக்கும் கருவி, உடல் மாற்றுத்திறன் உடைய நபரை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையிலுள்ள நபர்களுக்கு சலுகைகள், செவித்திறன் பாதிக்கப்பட்டவரை நல்ல நிலையில் உள்ளவர் மணக்கும் திட்டம், திருமண உதவித் தொகை, முட நீக்கு சாதனம் போன்ற பல்வேறுஉதவிகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 54 நபர்களுக்கு பவர் வீடர், டிரோன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 8 நபர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம்; பால்வளத் துறை சார்பில், 30 பயனாளிகளுக்கு கறவை மாட்டுக் கடன், சிறிய பால் பண்ணை அமைத்தல் போன்ற பல்வேறு உதவிகள்; 6 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 167 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவி, சிறு வியாபாரம்,முதியோர் உதவி, உலமா நலவாரிய அடையாள அட்டை, திரவ எரிவாயு தேய்ப்புப் பெட்டி ஆகிய உதவிகள்;
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 480 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 6 பயனாளிகளுக்கு கல்விக் கடன் உதவிகள்; கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை சார்பில், 74 பயனாளிகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள்;
என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 205 கோடியே 6 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 15,453 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.






