இந்தியா

யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்! மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!

பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் காக்கும் யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்து, ஆலோசனை நடத்தி மாற்று வழிமுறைகளை வகுக்க யூ.ஜி.சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்! மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவான யூ.ஜி.சி.யின் வழிகாட்டு முறைப்படியே செயல்படும். யூ.ஜி.சி தான் அனைத்து கல்லூரிகளுக்கான நெறிமுறைகள், கல்லூரிகள் செயல்படும் முறைகள், தேர்வு முறைகள் போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கும்.

இருப்பினும் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் பட்டியல், பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீதான வன்முறைகள், ஒடுக்கு முறைகள் தொடர்ந்து அரங்கேறிதான் வருகிறது.

இந்திய அளவில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் உயர்கல்வி நிலையங்களுக்குள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமூகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நுழைந்திருக்கிறார்கள். கல்வி நிலையங்களில் அவர்கள் சந்திக்கும் கொடுமைகளுக்கு அளவே இல்லை.

சக மாணவர்களாலும் உயர் ஜாதியினர் என்பவர்களாலும், கல்வி நிறுவன நிர்வாகத்தினர் என பல தரப்பினராலும் புறக்கணிப்புகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்.

ஆனால், இதுகுறித்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும் வேறு வேறு காரணங்களை சுட்டிக்காட்டி நடந்த சம்பவங்களை மூடி மறைக்கவே முயற்சி செய்துள்ளன. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டி பல்வேறு கட்ட போராட்டங்களை அரசியல் கட்சிகள், மாணவ அமைப்புகள் முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில் இந்த அநீதிகளுக்கு ஒரு தீர்வாக பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிகளை அமல்படுத்தியது. அவ்விதிகளின்படி, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளை களைவதற்கான கலளவதற்கான நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால், இதற்கு எதிராக உயர்ஜாதி மாணவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி, போராட்டங்கள் நடத்தி, வழக்குத் வழக்கு தொடுத்தனர். தற்போது இந்த விதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை வழங்கியுள்ளது.

யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்! மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!

தற்போது பெறப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் மீதான நம்பிக்கையை கேள்வி எழுப்பியுள்ளது மாட்டுமல்லாமல், உயர்சாதியினரின் தொடர் ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவாகவும் இது உள்ளது. கண்ணெதிரே பல்வேறு அநீதிகள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கே எதிராக அரங்கேறிவரும் இந்த சூழ்நிலையில் தீர விசாரணை நடத்தாமல் இது போன்ற இடைக்காலத்தடை கொடுத்திருப்பது, உயர்சாதியினர் என கூறிக்கொள்பவர்களின் தொடர் அச்சுறுத்தலுக்கு சலங்கை கட்டி விட்டதுபோல் ஆகிவிட்டது.

இந்த இடைக்காலத் தடைக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒன்றிய அரசும் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது.

யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான யுஜிசி ஒழுங்குமுறைகள்-2026 ஆழமாக வேரூன்றிய பாகுபாடு மற்றும் நிறுவன அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட உயர் கல்வி அமைப்பைச் சீர்திருத்துவதில் எடுக்கப்பட்ட ஒரு தாமதமான, ஆனால் வரவேற்கத்தக்க முடிவாகும்.

ஒன்றிய அளவில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர் கல்வி நிறுவனங்களில், குறிப்பாக பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களிடையே, மாணவர் தற்கொலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனுடன், தென்னிந்தியா, காஷ்மீர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களும் நிகழ்ந்துள்ளன.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டபோது காணப்பட்டதைப் போலவே, தற்போதைய யுஜிசி ஒழுங்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு, அதே பிற்போக்கு மனப்பான்மையால் விளங்குகிறது. ஒன்றிய அரசு இத்தகைய அழுத்தங்கள் இந்த ஒழுங்குமுறைகளையோ அல்லது அவற்றின் முக்கிய நோக்கங்களையோ நீர்த்துப்போகச் செய்ய அனுமதிக்கக்கூடாது.

யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்! மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!

துணைவேந்தர்கள் மீதே குற்றச்சாட்டுகள் எழுந்த ரோஹித் வெமுலாவின் தற்கொலை போன்ற வழக்குகள், கல்வி நிறுவனத் தலைவர்களால் தலைமை தாங்கப்படும் குழுக்கள் எவ்வாறு சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன. குறிப்பாக, பல உயர் கல்வி நிறுவனங்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களால் வழிநடத்தப்படும்போது இந்தச் சந்தேகம் வலுப்பெறுகிறது.

மாணவர் மரணங்களைத் தடுப்பது, பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பது ஆகியவற்றில் ஒன்றிய பாஜக அரசு உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தால், இந்த ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், அவற்றின் கட்டமைப்பு குறைபாடுகளைக் களைய திருத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல்வேறு எதிர்க்கட்சிகள் மாணவ அமைப்புகள் இந்த இடைக்கால தடைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு முன்னெடுப்பை பல்கலைக்கழக மானியக்குழு எடுத்திருக்குபோது அதற்கு எதிராக உயர்சாதி என்ற முகமூடியுடன் கிளம்பியிருக்கும் கும்பல்களை துடைத்தெறிந்து, இந்த விதிமுறைகள் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு, பட்டியல் பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது.

banner

Related Stories

Related Stories