தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்! பல்வேறு துறை சாதனைகளுடன் வலம் வந்த அணிவகுப்பு ஊர்தி!

சென்னை காமராஜர் சாலையில் இன்று (ஜனவரி 26) 77வது குடியரசு தின விழா பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் முப்படைகளின் அணிவகுப்புடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்! பல்வேறு துறை சாதனைகளுடன் வலம் வந்த அணிவகுப்பு ஊர்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

இந்தியா முழுவதும் இன்று (ஜன.26) 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் இன்று சென்னை கரமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து இராணுவப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழ்நாட்டில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்! பல்வேறு துறை சாதனைகளுடன் வலம் வந்த அணிவகுப்பு ஊர்தி!

பின்னர் குடியரசு தின விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. குடியரசு தின சிறப்பு விருதான வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை, நீலகிரி மாவட்ட தீயணைப்புத்துறையை சேர்ந்த சங்கர், சுரேஷ், ரமேஷ், மறைந்த பீட்டர் ஜான்சன் ஆகியோருக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதனைத்தொடர்ந்து கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலிமுல்லாவுக்கும், சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருதை, தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணிக்கும் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதுக்கான முதல் பரிசு மதுரை மாநகர காவல்துறைக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்ட மாநகர காவல்துறைக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன், சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விருது வழங்கும் நிகழ்வு முடிந்ததும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் குடியரசு தின சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. “சங்கே முழங்கு...” என்ற பாடலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கலை நிகச்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் கண்டுகளித்தனர்.

தமிழ் மாண்பையும், தமிழர்களின் வீரத்தையும் விவேகத்தையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் விதமாக கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாரம்பரிய இசையுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும், தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான பல்வேறு துறைகளின் சிறப்பு அணிவகுப்பு ஊர்திகள் நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 'மங்கள இசை' மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களை வெளிப்படுத்தும் விதமாக வளர்ச்சிப்பாதையில் 'வெல்வோம் ஒன்றாக!' எனும் தலைப்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. காவல்துறை சார்பில் ’பாதுகாப்பான தமிழ்நாடு’ எனு தலைப்பில் மக்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நலனை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில், விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை எடுத்துக்காட்டும் விதமாக உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. புதிய பெரியார் நினைவு சமத்துவபுரம் முதல் கலைஞர் கனவு இல்லம் வரை மக்களுக்கு பயன்பெற்ற பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்! பல்வேறு துறை சாதனைகளுடன் வலம் வந்த அணிவகுப்பு ஊர்தி!

கூட்டுறவுத்துறையின் சார்பில், தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த பலன்களை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. உழவர்கள் சார்ந்த பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

திராவிட மாடல் அரசில் கல்வித் துறையின் அதிவேகமான வளர்ச்சியை எடுத்துரைக்கும் விதமாக சார்பில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார அணிவகுப்பு ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. கைத்தறித்துறையில் கொண்டு வரப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களை எடுத்துரைக்கும் விதமாக கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை சார்பில் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

மருத்துவத்துறையில் கொண்டு வந்துள்ள எண்ணற்ற சிறப்பு திட்டங்களை விளக்கும் விதமாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக கொண்டு வரப்பட்டுள்ள அருமையான திட்டங்களை வெளிப்படுத்தும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

சுற்றுலாத்துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, பாலின பாகுபாடின்றி அனைத்து சமூக மக்களுக்குமான திட்டங்களை விளக்கும் விதமாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத் துறையின் சாதனைகளை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மூலம் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை பறைசாற்றும் விதமாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. முதல்வர் படைப்பகத்தால் மக்களுக்கு கிடைக்கும் பயனை எடுத்துரைக்கும் விதமாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. "நிலையான கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம்" (TN-SHORE) திட்டத்தை விளக்கும் வகையில் வனத்துறையின் சார்பில் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட முருகப்பெருமானானின் அறுபடை வீடுகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. மீன்வளத்துறையின் சிறப்பு திட்டங்களை எடுத்துரைக்கும் விதமாக, மீன்வளத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

பல்வேறு துறைகளின் சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்திகள் அனைவரையும் கவரும் விதமாக அமைந்தது.

77வது குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் மற்றும் தமிழர்களின் கலையை பறைசாற்றும்படி நடந்த நிகழ்வுகளோடு குடியரசுதின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

banner

Related Stories

Related Stories