தமிழ்நாடு

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி

எளிய மக்களும் பயன்பெறும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுமையான தொழில்நுட்பங்களின் மூலம், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எய்திடும் நோக்கில், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து Umagine TN என்ற உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வைச் சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.

2021-2022-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது யுமாஜின் (UMAGINE) எனும் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை ஆண்டுதோறும் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி Umagine TN மாநாடு 2023, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது,

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் (எல்காட்) மூலம் UMAGINE TN 2026 என்னும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு எப்போதுமே அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் திறந்த மனதோடு வரவேற்கும் மாநிலம். புதிய முயற்சிகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமது கட்டமைப்பை உண்டாக்குவதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. திராவிட இயக்கமும் அறிவியல் சார்ந்தே செயல்பட்டு வருகிறது. அதனால்தான் பல வகைகளில் தமிழ்நாட்டு மக்கள் எதிர்காலத்தை நோக்கிய சிந்தனை கொண்டவர்களாக விளங்குகின்றனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தகவல் மாநிலத்திற்கான தொழில்நுட்ப கொள்கையை (State IT Policy) அறிமுகப்படுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்து கொடுத்த இந்த அடித்தளத்தில்தான், அனைத்து வளர்ச்சியையும் திராவிட மாடல் அரசு கட்டியெழுப்பி வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியடைந்து, அதன்வழி எளிய மக்களும் உரிய பயன்களை பெற்று வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories