
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.12.2025) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில்,
235 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவிலான 33 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 356 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், வடக்கு வள்ளியூரில் 33 இலட்சம் ரூபாய் செலவில் ராஜரத்தினம் நகர் பூங்கா, கோட்டையடியில் 44 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடம், வீரவநல்லூரில் 36 இலட்சம் ரூபாய் செலவில் மகாராஜா நகர் பூங்கா;
16 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கல் பணிகள், கல்லிடைக்குறிச்சியில் 18 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கல் பணிகள், மணிமுத்தாறு-இந்திரா காலனி, மூலகரைப்பட்டி-கடம்பன்குளம், திருக்குறுங்குடி-புதுத்தெரு, முக்கூடல்-இந்திரா காலனி ஆகிய இடங்களில் 1 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடங்கள்;
அம்பாசமுத்திரம்-ரகுமான் காலனியில் 30 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார மையம், அம்பாசமுத்திரத்தில் 36 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், களக்காடு-கீழப்பத்தையில் 1 கோடி ரூபாய் செலவில் சமுதாயக் கூடம், களக்காட்டில் 1 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகம்;
வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை சார்பில், காவல்கிணறு பகுதியில் 86 இலட்சம் ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு தினசரி மலர் மற்றும் காய்கறி வணிக வளாகம்;
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், முன்னீர்பள்ளத்தில் 35 இலட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம்;
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பாளையங்கோட்டை டாக்டர் அம்பேத்கர் நகர் திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் 53 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் 408 அடுக்குமாடி குடியிருப்புகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 72 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவிலான இதயம், நரம்பியல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கான மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைத் தொகுதி, மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் 5 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் தாய்மை மற்றும் குழந்தை பராமரிப்பு பிரிவு, தொற்று அல்லாத நோய்களுக்கான பிரிவு மற்றும் டயாலிசிஸ் பிரிவுகள், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் 15 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், பாளையங்கோட்டையில் உணவு பகுப்பாய்வு ஆய்வகத்தின் மேல் தளத்தில் 1 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் நுண்ணுயிர் ஆய்வகம், மேலதிருவேங்கடநாதபுரத்தில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்;

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மேலப்பாளையம் மீரா பள்ளிவாசலில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாய சேவை மையம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், மன்னார்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் 8 கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள், திருக்குறுங்குடி, இட்டமொழி, என்.ஜி.ஓ.காலனி, நாடார் உவரி, முனைஞ்சிப்பட்டி, கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் ஆகிய இடங்களில் 1 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகக் கட்டடங்கள்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், பாளையங்கோட்டையில் 3 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டுதல் மையம்;
பால்வளத்துறை சார்பில், இராமகிருஷ்ணாபுரத்தில் 25 இலட்சம் ரூபாய் செலவில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், நாங்குநேரி-கிருஷ்ணாபுதூர் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் 38 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்;
என மொத்தம், 235 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 33 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
நீர்வளத் துறை சார்பில், சேரன்மகாதேவி வட்டம்-முக்கூடலில் 3 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு மறுசீரமைப்பு பணிகள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, காரையார் சின்ன மயிலார் பகுதியில் தாமிரபரணி ஆற்றை கடந்து செல்வதற்கு 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எஃகு நடைமேடை மேம்பாலம் பணிகள்;
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், களக்காடு-சிதம்பராபுரம் சாலை மற்றும் கங்கைகொண்டான்-வடகரை-கைலாசபுரம் சாலை ஆகிய இடங்களில் 13 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப்பாலங்கள் அமைக்கும் பணிகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், பாளையங்கோட்டையில் 3 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உரக் கட்டுப்பாட்டு ஆய்வகம், அம்பாசமுத்திரத்தில் 2 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 மெட்ரிக் டன் திறன் கொண்ட விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 250 மெ.டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்பு கிடங்கு;
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை-நரசிங்கநல்லூர் பேட்டை சிட்கோ மூலம் 223 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள்;
கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், வீரவநல்லூரில் 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனைக் கட்டடப் பணிகள்;
எரிசக்தித் துறை சார்பில், பாளையங்கோட்டை அரசு பன்முகச் சிறப்பு மருத்துவமனை, சீவலப்பேரி ஆகிய இடங்களில் 10 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 33/11 கிலோவாட் கொண்ட துணை மின்நிலையங்கள் நிறுவும் பணிகள்;
பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத்துறை சார்பில், திருநெல்வேலியில் 98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “காயிதே மில்லத் அறிவுலகம்” நூலகக் கட்டடப் பணிகள்;
என மொத்தம், 356 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 11 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 430 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், 20 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் உதவிகள், மகளிர் திட்டத்தின் சார்பில், 2550 பயனாளிகளுக்கு சுய உதவிக் குழு வங்கி இணைப்பு, நலிவு நிலை குறைப்பு நிதியுதவி, சமூக முதலீட்டு நிதி, அமுத சுரபி நிதி போன்ற பல்வேறு நிதியுதவிகள், வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ், 189 பயனாளிகளுக்கு நுண் நிறுவன நிதி கடன் உதவிகள்;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 707 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வே.ரா, விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம், கனரக ஓட்டுநர் உரிமம் வழங்குதல், தையல் இயந்திரம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்; 4 பயனாளிகளுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 325 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை;
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 390 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், திறன்பேசி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்;
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில், 45 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், இலவச தேய்ப்பு பெட்டிகள், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள்; சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 51 பயனாளிகளுக்கு கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர் நலவாரியம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 2,500 பயனாளிகளுக்கு உழவர் காசுக் கடன், கால்நடை மூலதனக் கடன், சுய உதவிக்குழு கடன், சிறுவணிகக் கடன், மாற்றுத்திறனாளி கடன், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்/விதவைகளுக்கான கடன், பணிபுரியும் மகளிர் கடன், பெண்கள் தொழில் முனைவோர் கடன், வீட்டு வசதி கடன், வீட்டு அடமானக் கடன், பண்ணைசாராக் கடன் ஆகியவற்றின் கீழ் உதவிகள், 700 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 500 பயனாளிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், விதை கிராமத் திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், வேளாண் இயந்திரமாக்குதல் துணை இயக்கம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம், நுண்ணீர் பாசன திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 325 பயனாளிகளுக்கு பனை மேம்பாட்டு இயக்கம், தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம், தேசிய தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், உழவர் நல சேவை மையம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;

வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 200 பயனாளிகளுக்கு வேளாண்மை இயந்திர மயமாக்குதல் துணை இயக்கத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 660 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள், பழங்குடியினர் நலவாரியம் குடும்ப உறுப்பினர் அட்டைகள், வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவி தொகைகள் என பல்வேறு உதவிகள்;
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில், 385 பயனாளிகளுக்கு நிலப்பட்டாவுடன் கூடிய ஆழ்துளைகிணறுகளுக்கு மின் இணைப்புகள், சுய தொழில் தொடங்குவதற்கான நிதியுதவிகள், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்,
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 65 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;
மனித வள மேலாண்மைத் துறை (முன்னாள் படைவீரர் நலன்) சார்பில், 3 பயனாளிகளுக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் உதவிகள்,
உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு மறுவாழ்வு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள்;
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் 365 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குதல்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், 26 பயனாளிகளுக்கு விபத்துக்காப்பீட்டு பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 200 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உதவிகள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 7 பேரூராட்சிகளில் 9 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்குதல்;
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 34,342 பயனாளிகளுக்கு நகர நிலவரித் திட்டத்தின் கீழ் பட்டாக்கள், நத்தம் வீட்டுமனைப் பட்டாக்கள், மீனவ மக்களுக்கான வீட்டுமனைப் பட்டாக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் இ-பட்டாக்கள்;
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 125 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து நிவாரண உதவித் தொகை, உழவர் அட்டைகள் ஆகிய உதவிகள்;
கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்கள், குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர மீன் வாகனம் மானியத்தில் வழங்கும் திட்டம், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு கண்ணாடி நாரிழைபடகு இயந்திரம், வலைகள் மற்றும் குளிர்காப்பு பெட்டிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகள்; பால்வளத்துறை சார்பில் 5 புதிய சங்கங்கள் துவக்கி வைத்தல் திட்டம்;
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 15 புதிய பேருந்துகள் சேவை தொடங்குதல்; முன்னோடி வங்கியின் சார்பில் 344 பயனாளிகளுக்கு கல்விக் கடன் உதவிகள்;
என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 101 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 45,447 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.






