
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தி.மு.க எம்.பி-க்கள் ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சமூகப் பாதுகாப்பின் ஒரு பகுதியாக அமைப்புசாரா ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்க ஒன்றிய அரசிடம் உள்ள திட்டங்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் மொத்தமுள்ள அமைப்புசாரா ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு என்ன? மேலும் அமைப்புசாரா ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, வருடாந்திர விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற பிற சமூகப் பாதுகாப்பு பலன்களை வழங்க அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன என்றும் ராசா எம்.பி கேட்டுள்ளார்.
UPI பரிவர்த்தனையை முறைப்படுத்த நடவடிக்கை என்ன?
UPI எனப்படும் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் ஜி. செல்வம் மற்றும் சி.என். அண்ணாதுரை கேள்வி எழுப்பினார்கள்
UPI வழிமுறை மற்ற பண பரிவர்த்தனை முறைகளைவிட மேம்பட்டதாக இருக்கிறதா, எதன் அடிப்படையில் அது மதிப்பிடப்படுகிறது? டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக UPI தளத்தில் இணைந்துள்ள வணிகங்களின் மொத்த எண்ணிக்கை என்ன? தமிழ்நாட்டில் RuPay இணைக்கப்பட்ட கணக்குகள் மூலம் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் மதிப்பு எவ்வளவு?
தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாட்டில் பொது சேவைகள், போக்குவரத்து மற்றும் மின் வணிக தளங்களுடன் RuPay மற்றும் UPI அமைப்புகளை ஒருங்கிணைக்க அரசாங்கம் முன்மொழியும் புதிய முயற்சிகள் யாவை என டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு கேள்விகளை அவர்கள் கேட்டுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகளின்படி வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்?
சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி முந்தைய ஆண்டுகளைவிட நாட்டில் தற்போதைய வேலையின்மை விகிதம் அதிகரித்திருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் மலையரசன் மற்றும் டாக்டர் கலாநிதி வீரசாமி கேள்வி எழுப்பினார்கள்.
கடந்த மூன்று நிதியாண்டுகளில் உருவாக்கப்பட்ட முறையான மற்றும் முறைசாரா துறை வேலைவாய்ப்புகளின் மொத்த எண்ணிக்கை என்ன? இளைஞர்கள், பெண்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களிடையே அதிக வேலையின்மையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் MGNREGA, PMKVY, DDUGKY மற்றும் பிற திட்டங்களின் விவரங்கள் என்ன? வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் செயல்திறன் குறித்து அரசு நடத்தியுள்ள ஆய்வுகள் என்ன? பயிற்சி பெற்ற இளைஞர்கள் உண்மையில் பாதுகாப்பான வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக திறன் மேம்பாடு, தொழில் ஒத்துழைப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவை மேம்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? நாட்டில் வேலையின்மையைக் கணிசமாகக் குறைக்க அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு மற்றும் இலக்கின் விவரங்கள் குறித்தும் விரிவான பதில்களை அவர்கள் கேட்டுள்ளனர்.சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி முந்தைய ஆண்டுகளைவிட நாட்டில் தற்போதைய வேலையின்மை விகிதம் அதிகரித்திருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் மலையரசன் மற்றும் டாக்டர் கலாநிதி வீரசாமி கேள்வி எழுப்பினார்கள்.
கடந்த மூன்று நிதியாண்டுகளில் உருவாக்கப்பட்ட முறையான மற்றும் முறைசாரா துறை வேலைவாய்ப்புகளின் மொத்த எண்ணிக்கை என்ன? இளைஞர்கள், பெண்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களிடையே அதிக வேலையின்மையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் MGNREGA, PMKVY, DDUGKY மற்றும் பிற திட்டங்களின் விவரங்கள் என்ன? வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் செயல்திறன் குறித்து அரசு நடத்தியுள்ள ஆய்வுகள் என்ன?
பயிற்சி பெற்ற இளைஞர்கள் உண்மையில் பாதுகாப்பான வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக திறன் மேம்பாடு, தொழில் ஒத்துழைப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவை மேம்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? நாட்டில் வேலையின்மையைக் கணிசமாகக் குறைக்க அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு மற்றும் இலக்கின் விவரங்கள் குறித்தும் விரிவான பதில்களை அவர்கள் கேட்டுள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குறைக்க ஒன்றிய அரசின் திட்டங்கள்தான் காரணமா?
இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தற்சமயம் தங்கள் திட்டங்களை கைவிட்டு வருகின்றன எனும் செய்திகள் குறித்து திமுக சேலம் மக்களவை உறுப்பினர் செல்வகணபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பல நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை தாமதப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி அவர் கேள்சி எழுப்பியுள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டில் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்களை நிறுத்தியுள்ளன என்றும் அதன் மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 1200 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களால் கைவிடப்பட்ட திட்டங்களின் மதிப்பு 2013-2014 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருகின்றன என்பதையும் அவர் கூறியுள்ளார்.






