தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் : 6 பேர் உயிரிழப்பு - தென்காசியில் நடந்த சோகம்!

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் : 6 பேர் உயிரிழப்பு - தென்காசியில் நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்காசி மாவட்டம், இடைகால் அருகே சங்கரன் கோவிலில் இருந்து தென்காசிக்கு வந்த தனியார் பேருந்தும், தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து பற்றி அறிந்த உடனே, காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

மேலும், அருகாமையில் இருந்தவர்கள் அவசர ஊர்தி உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories