தமிழ்நாடு

காலமானார் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

காலமானார் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

1933 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தவர் ஈரோடு தமிழன்பன். கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வரலாற்று ஆசிரியர், திறனாய்வாளர், செய்தி வாசிப்பாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், ஹைக்கூ கவிஞர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை கொண்டவார்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக, தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியவர். மேலும் 2004 ஆம் ஆண்டு வணக்கம் வள்ளுவ என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

காலமானார் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

இவர் இன்று மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி மறையுதினார். அவரின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞரோடு நெருக்கமான பழக்கம் கொண்ட ஈரோடு தமிழன்பன் அவர்களின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories