
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாடுமுழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும்,உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம் என துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள சமூகவலைதள பதிவில், ”மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் - ஒவ்வொரு இல்லத்தையும் வண்ணமயமாக்குவது குழந்தைகள்.
இனிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து - ஆரோக்கியம் - கல்வி - விளையாட்டு என 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம்! குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்” என தெரிவிதுள்ளார்.






