தமிழ்நாடு

பகுத்தறிவு கொண்ட உலக குடிமக்களாக வளர்த்தெடுப்பேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவு கொண்ட உலக குடிமக்களாக வளர்த்தெடுப்பேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாடுமுழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகளின் கனவுகளுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி,

பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய்,

வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் காலை உணவுத்திட்டம்,

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள்,

உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்,

ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories