தமிழ்நாடு

ஒரு குடும்பச் சண்டைக்கு அறிக்கை விட்ட பழனிசாமி : கோவை விவகாரத்தில் திமுக IT WING பதிலடி!

அரைககுறையாக செய்திகளை பார்த்துவிட்டு ஒரு குடும்பச் சண்டைக்கு அறிக்கை விட்ட எதிர்க்கட்சி தலைவரை இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை.

ஒரு குடும்பச் சண்டைக்கு அறிக்கை விட்ட பழனிசாமி : கோவை விவகாரத்தில் திமுக  IT WING பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையில் பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்த உடனே காவல்துறையினர் உடனே விசாரணை நடத்தினர். இதில் காரில் கணவன் - மனைவிக்கு இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதை தூரத்தில் இருந்த பார்த்த பொதுக்கள், காரில் பெண்ணை தவறாக கடத்தி செல்வதாக புரிந்து கொண்டுள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட குடும்பத்தினரும் காவல்துறையில் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இந்த உண்மை தெரியாமல், வழங்கம் போல திமுக அரசை எடப்பாடி விமர்சித்துள்ளார். இதற்கு திமுக IT WING சமூகவலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளது. அதில்,கோவையில் நேற்று ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக செய்திகளில் பார்த்தேன் என்று "டிவி புகழ்" பழனிசாமி சமூக வலைதளங்களில் நீட்டி முழக்கி இருக்கிறார்.

உண்மை நிலை என்னவென்றால் கோவையில் யாரும் கடத்தப்படவில்லை. ஒரு கணவன் - மனைவிக்குள் சிறிது சச்சரவு ஏற்பட்டு காரில் சென்றுள்ளார்கள். அதனை பார்த்த ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்ல, காவல்துறை தனிப்படை அமைத்து துரிதமாக செயல்பட்டு அந்த கணவன் - மனைவியை கண்டறிந்து விசாரித்துள்ளனர்.

திமுக அரசு மீது திட்டமிட்டு பொய்களை வதந்திகளை ஆதாரமற்ற தகவல்களை பரப்பி அரசியல் பிழைப்பை நடத்த நினைக்கிறார் பழனிசாமி. அரைககுறையாக செய்திகளை பார்த்துவிட்டு ஒரு குடும்பச் சண்டைக்கு அறிக்கை விட்ட எதிர்க்கட்சி தலைவரை இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories