தமிழ்நாடு

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவதன், அவசியத்தையும் அதன் குறியீடுகளைப் பற்றியும் இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொதுவாக புயல் காலங்களில், துறைமுகங்களில் 1 ஆம் எண், 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்று நாம் செய்திகளில் கேட்டு இருப்போம். தற்போது கூட மோன்தா புயல் காரணமாக சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த மோன்தா புயல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளதால், விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 6 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது, குறியீடுகள் எதை உணர்த்துகின்றன என்பது குறித்து நாம் இங்கு பார்ப்போம்.

1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றோடு மழையுள்ள வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என்பதை குற்பிடுகிறது.

2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவானதை எச்சரிக்கும் வகையில் ஏற்றப்படும் குறியீடாகும்.

3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, திடீர் காற்றோடு மழை பெய்யும். வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை எச்சரிப்பதாகும்.

4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, புயலால் துறைமுகம் அச்சுறுத்தப்படலாம். ஆனால் மிக அதிக முன்னெச்சரிக்கை எடுக்கும் அளவுக்கு தீங்கு விளைவிக்காது என்பதை குறிக்கிறது.

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!

5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாகும். துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என எச்சரிப்பதாகும்.

6 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு (அபாயம்), துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாகும். துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என எச்சரிப்பதாகும்.

7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு (அபாயம்), புயலினால் துறைமுகம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிப்பதாகும்.

8 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு (பெரிய அபாயம்), இடது பக்கமாக கரையைக் கடக்கும், கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கிறது.

9 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு (பெரிய அபாயம்) வலது பக்கமாக கரையை கடக்கும். புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கிறது.

10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு (பெரிய அபாயம்) துறைமுகம் அல்லது அருகே கடந்த செல்லுமென எதிர்பார்க்கப்படும். புயலினால் கடுமையாக துறைமுகம் பாதிக்கப்படும் என்பதை எச்சரிப்பதாகும்.

11 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தகவல் தொடர்பற்று போதல், வானிலை எச்சரிக்கை மையத்தோடு தகவல் தொடர்பு இல்லாத நிலையில் மோசமான வானிலையால் கேடு விளையலாம் என எச்சரிப்பதாகும்.

இப்படி 11 புயல் எச்சரிக்கை கூண்டுகள், புயலின் தன்மைக்கு ஏற்ப ஏற்றப்பட்டு வருகிறது. அதேபோல் பகல் நேரத்தில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுகிறது. இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்படுகிறது.

    banner

    Related Stories

    Related Stories