தமிழ்நாடு

"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!

"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதியிலிருந்து துவங்கியிருக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. பேரிடர் வருவாய் துறை கணக்கின்படி 1.10.2025 முதல் 24.10. 2025 வரை மொத்தம் மழையின் அளவு 21.8 சதவீதம் ஆகும். இது இயல்பாக மழை பெய்யக் கூடிய அளவை விட சற்று கூடுதலாக உள்ளது.

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயல் தொடக்கத்தில் சென்னையை நோக்கி வருவதாக தகவல் வந்திருந்தது. தற்போது ஆந்திராவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதனுடைய ஒரு பகுதியாக சென்னை சுற்றி உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளது. எனினும் இந்தப் புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது.

"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியிருக்கிறார். ஏரிகளின் நீர் இருப்பை பொருத்த வரையில் செம்பரம்பாக்கம் ஏரியில் 80.36 சதவீதமும், பூண்டி ஏரியில் 83.53 சதவீதமும், செங்குன்றம் ஏரியில் 81.85 சதவீதமும், சோழவரத்தில் 60.60 சதவீதமும் தண்ணீர் அளவு தற்போது உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதத்திற்கு வடகிழக்கு பருவ மழை பொழியும் . இதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. 1.10.2025 முதல் 25.10.25 வரை பருவமழையால் 31 பொதுமக்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். இதில் 23 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்

காயமடைந்த 47 பேரில் 14 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இறப்பு எண்ணிக்கை 485 ஆக உள்ளது, இதில் 335 கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் கோழிகள் பொறுத்த வரையில் 20,425 கோழிகள் உயிரிழந்த நிலையில், அவற்றின் 16,574 உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 1760 வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்துள்ளது, அதில் 1460 வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரக்கூடிய நாட்களில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மீதி நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.

இதில் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமான 6 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் தொடர்ந்து தண்ணீரின் அளவானது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நீர்மட்ட உயர்வு ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பொது மக்களுக்கு ஏற்ப பால் விநியோகம் உள்ளீட்டு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக பெரிய அளவு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெடுக்க நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் மேற்கொண்டு வருகிறோம்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories