அரசியல்

அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !

அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வரரான தொழிலதிபர் அதானி, இந்திய பங்குச்சந்தையில் பெரும் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கடந்தாண்டு கூறியது.

இந்நிலையில், அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதானி மீது மேலும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின், 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி நிறுவனத்திற்கு மோடி அரசு தாரைவார்த்துள்ளதாக கூறியுள்ளது.

அதானிக்கு சொந்தமான துறைமுக நிறுவனம் கடுமையான கடன் நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில், 35 ஆயிரம் கோடி ரூபாய் எல்.ஐ.சி. நிதியை அதானி நிறுவனத்திற்கு மோடி அரசால் வாரி வழங்கப்பட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் அதிர்ச்சியை தகவலை வெளியிட்டுள்ளது.

அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !

ஒன்றிய நிதியமைச்சகத்தின் பல்வேறு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி நிறுவனத்தின் பங்குதாரராக எல்.ஐ.சி. சேர்க்கப்பட்டு, 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதானி நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய நிதியை வழங்கியதில் ஒன்றிய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்.ஐ.சியின் பணியாற்றும் மூத்த அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, நிதி ஆயோக் மற்றும் ஒன்றிய நிதியமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகே, அதானி குழுமத்துக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, வாரி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது நண்பரான அதானிக்கும், அவரது குழுமத்துக்கும் எப்போதெல்லாம் நெருக்கடிகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்திய அரசு உதவுவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த கடன் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதை அடிப்படையாக வைத்தே ஒன்றிய அரசு அதானி நிறுவனத்துக்கு தாராளமாக நிதியை வழங்கியுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கோடிக்கணக்கானவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் நிதியை அதானி நிறுவனத்துக்கு தாரைவார்த்தது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories