இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சிறுநீரக முறைகேடு தொடர்பாக, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்," சிறுநீரக முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையிலான குழு நாமக்கல் பள்ளிபாளையத்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும், இந்த விவகாரத்தில், இடைத்தரகர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறுநீரக முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தமிழ்நாட்டில் 4 இடங்களில் உள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தை மறு சீரமைத்துள்ளதாகக் கூறினார். சிறுநீரக முறைகேடு விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.