தமிழ்நாடு

ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிச்சயமாக 14 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிச்சயமாக 14 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,"தொழிற்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதுவரை 77 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் கீழ் பல்வேறு துணை நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

ஃபாக்ஸ்கா நிறுவனத்தின் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு உறுதியாகியுள்ளது.அந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் 14 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கூகுள் பிரச்சனையில் கூகுள் மட்டும் அல்ல. அதற்குள் அதானி குழுமம் இருக்கிறது. கூகுள் நிறுவனம் இந்தியாவிற்குள் எப்படி முதலீடு செய்கிறது என்பதற்குள் எல்லாம் பெரிய விஷயங்கள் இருக்கிறது.

அண்டை மாநிலம் ஒன்று கூகுள் நிறுவனத்துடன் முதலீடு செய்ய உள்ள நிலையில், அதைபற்றி குறை பேச விரும்பவில்லை. கூகுள் நிறுவனத்துடன் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவில்லை என கூறுவதெல்லம் உண்மைக்கு புறம்பான செய்தி” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories