தமிழ்நாடு

நாளை தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை... எந்தெந்த நாட்களில் என்னென்ன விவாதம்? - விவரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

நாளை தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை... எந்தெந்த நாட்களில் என்னென்ன விவாதம்? - விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவுத் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.13) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையை எத்தனை நாட்கள் நடத்தலாம்? உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பேசியதாவது :-

சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (அக்.14, செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகின்ற அக்.17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

=> இதில் நாளை (அக்.14) - சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். மேலும் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறித்தும், முக்கிய பிரமுகர்கள் மறைவு குறித்தும், சட்டமன்ற பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி, மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.

நாளை தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை... எந்தெந்த நாட்களில் என்னென்ன விவாதம்? - விவரம்!

=> அக்.15 (புதன்கிழமை) - 2025 - 26ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (முதல்) பேரவைக்கு அளிக்கப்படும். அரசினர் அலுவல்கள்

=> அக்.16 (வியாழக்கிழமை) - 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை (முதல்) மீது விவாதம் நடைபெறும்.

=> அக்.17 (வெள்ளிக்கிழமை) - 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (முதல்) மீதான விவாதத்திற்கு பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

2025 26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (முதல்) குறித்த நிதி ஒதுக்க சட்டமும் வடிவு, அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும், (விவாதம் இன்றி) மேலும் ஏனைய சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் நடைபெறும்.

banner

Related Stories

Related Stories