தமிழ்நாடு

”வரலாறாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அடையாரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

”வரலாறாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்த் திரையுலகின் அடையாளமாகவே வாழ்ந்து மறைந்த சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறு சிவாஜி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கபட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் மணிமண்டப விளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். சிவாஜி கணேசனின் திரையுலக வரலாறை வெளிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட ஆவணபடத்தை அவரது குடும்பத்தினருடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”தமது நடிப்பாற்றலால் உலகையே வியக்க வைத்து - வரலாறாக வாழ்ந்து மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாளில் அவரது நினைவுகளைப் போற்றுகிறேன்” என சமூகவலைதளத்தில் புகழஞ்சலி சூட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories