கரூரில் நேற்று நடிகர் விஜய் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 39க்கும் மேற்பட்டோர் பலியான சோக நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களின் நெஞ்சங்களையும் பதற வைத்துள்ளது. 50–க்கும் மேற்பட்டோர் மயக்கமுற்றும், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில் கரூர் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. 100 கோடி மருத்துவமனை முன்குவிந்து கதறி அழும் காட்சி காண்போரை கலங்கச் செய்தது.
தகவலறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்பாலாஜியைத் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்று தேவையான உதவிகளை மேற்கொண்டார். வி.செந்தில்பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்து சென்று உரிய உதவிகளை மேற்கொண்டார்.
மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெரியகருப்பன், எஸ் எஸ் சிவசங்கர், மெய்யநாதன், சி.வி.கணேசன், ஆகியோர் கரூரில் முகாமிட்டு தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டறிந்ததுடன் தேவையான உதவிகளைச் செய்தார் செய்திடுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நேற்று இரவே கரூர் விரைந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘ட்விட்டர்’ பதிவில் கரூர் செய்திகள் கவலையளிக்கின்றன என வேதனை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவு வருமாறு:
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடிசிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புடன் அறிவூட்டியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்தார் செய்து தரும்படி உத்தரவிட்டுள்ளேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்க நடவடிக்கை எடுக்க ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், “இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.