உளறல்களுக்கு பேர் போனவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். 'இயேசு நாதரை சுட்ட கோட்சே', 'திருக்குறளை எழுதியது அவ்வையார்' என வாய்க்கு வந்தபடி உளறி கொட்டியவர் திண்டுக்கல் சீனிவாசன்.
இவரது உளறல் பேச்சு இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது, ”அ.தி.மு.கவை அழிக்க எம்.ஜி.ஆர். நினைத்தார்” என உளறி இருக்கிறார்.
திண்டுக்கல் நகரத்தில் அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது,அ.தி.மு.கவை அழிக்க எம்.ஜி.ஆர். நினைத்தார் என கூறினார். இதைகேட்ட அங்கிருந்த தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என்னதான் பேசுகிறார் என கொஞ்ச நேரம் தொண்டர்கள் திகைத்து விட்டனர். பின்னர் தான் திண்டுக்கல் சீனிவாசன் உளறுகிறார் என்பதை தொண்டர்கள் புரிந்துகொண்டனர்.