தமிழ்நாடு

ரயில் விபத்தில் சென்னை கோட்டத்தில் மட்டும் 228 பேர் உயிரிழப்பு... வெளிவந்த அதிர்ச்சி அறிக்கை !

ரயில் விபத்தில் சென்னை கோட்டத்தில் மட்டும் 228 பேர் உயிரிழப்பு... வெளிவந்த அதிர்ச்சி அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தண்டவாளங்களில் அத்துமீறி நுழைதல் மற்றும் படிக்கட்டில் பயணிப்பது போன்ற ஆபத்தான செயல்களால் சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 228 பேர் உயிரிழந்துள்ளனர் என தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் :

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), பயணிகளின் மற்றும் ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. தண்டவாளங்களில் அத்துமீறி நுழைதல் மற்றும் பாதுகாப்பற்ற பயணங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பாதுகாப்புப் படை தனது பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

விபத்து அறிக்கை (ஜனவரி – ஆகஸ்ட் 2025):

அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட மரணங்கள்: 228

காயம் அடைந்தவர்கள்: 34

சென்னை கோட்டத்தின் பாதுகாப்பு முயற்சிகள்:

பாதுகாப்பான பயணத்தை ஊக்குவிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும், சென்னை கோட்டம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது:

• சுவரொட்டிகள், ஒலி அறிவிப்புகள், மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

• உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நிகழ்ச்சிகள் நடத்துதல்.

• தண்டவாளங்களில் அத்துமீறி நுழைதல் மற்றும் படிக்கட்டில் பயணிப்பது போன்ற ஆபத்தான செயல்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ரயில்வே ஊழியர்களை நியமித்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல்.

ரயில் விபத்தில் சென்னை கோட்டத்தில் மட்டும் 228 பேர் உயிரிழப்பு... வெளிவந்த அதிர்ச்சி அறிக்கை !

பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறது:

• ரயில் தண்டவாளங்களைக் கடக்க, கட்டாயம் நடை மேம்பாலங்கள் (FOB), சுரங்கப்பாதைகள் (Subway), அல்லது லெவல் கிராசிங்குகளை மட்டுமே பயன்படுத்துங்கள். குறுக்கு வழிகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.

• எந்தச் சூழ்நிலையிலும் ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழையாதீர்கள்.

• இயங்கிக் கொண்டிருக்கும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம்.

• படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தவிர்த்து, ரயில் நிலையங்களுக்குள் பாதுகாப்பாக நடமாடுங்கள்.

• ரயில் வரும்போது தண்டவாளங்களைக் கடக்க வேண்டாம்.

• ரயில் நிலையங்களில், நடைமேடைகளில் உள்ள மஞ்சள் பாதுகாப்பு கோட்டிற்குப் பின்னால் எப்போதும் நில்லுங்கள்.

• ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும், நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கவனமாகப் பாருங்கள்.

• தண்டவாளங்கள் அல்லது ரயில்களுக்கு அருகில் இருக்கும்போது, இயர்போன்கள் அல்லது மொபைல் போன் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும்.

• விழிப்புடன் இருங்கள் மற்றும் ரயில்வேயின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள்.

ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவதும், பாதுகாப்பற்ற பயணத்தில் ஈடுபடுவதும் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதுடன், குடும்பங்களுக்கு அளவற்ற துயரத்தையும், ரயில் சேவைகளில் பெரும் இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றன.

பயணத்தை பாதுகாப்பானதாகவும், பொறுப்புணர்ச்சி உள்ளதாகவும் மாற்றுவதற்கு ரயில்வேயுடன் கைகோர்க்குமாறு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பயணிகளை வலியுறுத்துகிறது.

"உங்கள் பாதுகாப்பு, எங்கள் முன்னுரிமை - பாதுகாப்பான பயணம், உறுதியான பயணம்."

banner

Related Stories

Related Stories