தமிழ்நாடு

11 சவரன் நகை திருட்டு வழக்கு : த.வெ.க பெண் நிர்வாகி கைது!

11 சவரன் நகை திருட்டு வழக்கில் த.வெ.க பெண் நிர்வாகியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

11 சவரன் நகை திருட்டு வழக்கு :  த.வெ.க பெண் நிர்வாகி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அடுத்த செருவலூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மகள் அர்சிதா திப்பானி. இவர் மேல்புறம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பில் உள்ளார்.

மேலும் சட்ட கல்லூரியில் படித்து வரும் இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் அர்சிதா திப்பானி, கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி, பழவிளை பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் உள்ள வழக்கறிஞர் விஜயகுமார் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என அவசரம் என கூறியுள்ளார். இதனால் அவர், அர்சிதா திப்பானியை வீட்டிற்கு வர சொல்லி ஓய்வரையை பயன்படுத்த அனுமதித்துள்ளார்.

பின்னர் அவரும் வீட்டுக்கு வந்த ஓய்வரையை பயன்படுத்தி விட்டு, பத்து நிமிடத்திலேயே சென்று விட்டார். இதையடுத்து 2 நாள் கழித்து பார்த்த போது விஜயகுமார் தாயார் அறையில் இருந்த 11.25 சவரன் தங்க நகை காணவில்லை.

இதையடுத்து அர்சிதா திப்பானி வந்து சென்ற பின் வேறு யாரும் வரவில்லை. இதனால் அவர்மீது சந்தேகத்தின் படி ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த விசாரித்தபோது, அர்சிதா திப்பானி நகை திருடியது உறுதியானதை அடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.

திருட்டு வழக்கில் த.வெ.க நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories