தமிழ்நாடு

குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!

குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையரஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

குட் பேட் அக்லி -
இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தில், ’இளமை இதோ இதோ’, ’ஒத்த ரூபாயும் தாரேன்’, ’என் ஜோடி மஞ்சக் குருவி’ ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்ன உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்து.

அந்த மனுவில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்கவும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜரானார். இதனையடுத்து, குட் பேட் அக்லி படத்தில், மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மனு குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories