புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக முன்னாள் மாநிலத் தலைவர் சாமிநாதன் அறிவித்துள்ளது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.கவில் இருந்து விலகுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சாமிநாதன், 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் இருந்த பா.ஜ.கவில் இருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பா.ஜ.கவில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஊழலற்ற நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன்” என தெரிவித்துள்ளார்.