தமிழ்நாடு

பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !

பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஸ்கை இ ஸ்போர்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் கேமிங் திருவிழா இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கேமிங் திருவிழாவில் இன்றைக்கு பிரபலமாக உள்ள செல்போன் மூலம் விளையாடக்கூடிய விளையாட்டுகளான பப்ஜி கேம், ப்ரீ பையர் கேம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த முறையில் விளையாடி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுதொகைகளும் வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி நடுத்தர மக்கள் வாங்க முடியாத கணினி மூலம் விளையாடக்கூடிய இணையதள விளையாட்டு மற்றும் ப்ளே ஸ்டேஷன் மூலமாக விளையாடக்கூடிய விளையாடு போட்டிகளும் நடத்தப்பட்டதால் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து விளையாடினர். இணையதள விளையாட்டுகளில் ஒவ்வொரு போட்டிக்கும் தல 5 ஆயிரம் பரிசுத்தொகை என மொத்தமாக 3 லட்சம் வரை பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளன.

பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !

அதேபோல் அனிமேஷன் மூலமாக உருவாக்கப்பட்ட தொடர் மற்றும் படங்கள் தொடர்பான பிரபலம் பெற்ற கதாபாத்திரத்தின் ஆடைகளை அணிந்து கொண்டும் பொதுமக்கள் அரங்கம் முழுவதும் உலா வந்தனர். குறிப்பாக காஸ்ட் பிளே என்று அழைக்கப்படக்கூடிய இந்த விளையாட்டுகளுக்கு பரிசு தொகையாக 2 நாட்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள போட்டிகளுக்கு இணையாக கேரம் போர்டு, செஸ், லுடோ, பிரிக்ஸ், ஸ்நேக் அண்ட் லெட்டர் உள்ளிட்ட விளையாட்டுகளும் நடத்தப்பட்டது. இதே போல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம், பல்லாங்குழி உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ் விளையாட்டுகளும் இந்த அரங்கில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிகளில் இணைய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து இந்த விளையாட்டு திருவிழா நடத்தப்படுவதாகவும் இதற்கு ஒரு நபருக்கு 299 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories