தமிழ்நாடு

கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

சட்ட மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் செயல்படவில்லை என்றால் சட்டமன்றம் செயலிழந்துவிடும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கையை கட்டிக்கொண்டு 
இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளுநர் அதிகாரம் குறித்து குடியரசு தலைவர் மூலம் கேள்வி எழுப்பியது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் சாசன பொறுப்பில் உள்ளவர்கள் செயல்படாமல் இருக்கும் சூழ்நிலைகளில் நீதிமன்றம் தலையிடாமல் கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மிக உயர்ந்த அரசியலமைப்பு பதிவில் இருந்தாலும் அவர்கள் செயல்படவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு தலையிட அதிகாரம் இல்லையா? தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் என்ன செய்வது?, என்றும் நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

ஆளுநருக்கு அரசியலமைப்பு பிரிவு 200படி முழு அதிகாரம் இருப்பதாக கருதினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன பாதுகாப்பு? என்றும் நீதிபதிகள் வினவினர். விதிகளின்படி மாநில ஆளுநர் செயல்படவில்லை என்றால் அது சட்டமன்றத்தை முழுமையாக செயலிழக்கச் செய்யும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக காலையில் நடைபெற்ற விசாரணையின்போது, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க அரசியலமைப்பில் காலக்கெடு இல்லை என்றால் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஒரு செயல்முறையை வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மசோதா எப்படி செயல்வடிவம் பெறாமல் இருக்க முடியும்? எவ்வளவு நாட்களுக்கு முடிவில்லாமல் வைத்திருக்க முடியும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

banner

Related Stories

Related Stories