பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய அரசே பாராட்டி இருக்கிறது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்கு புறப்பான கருத்துக்களை பேசி வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை,”பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய அரசே பாராட்டி இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் பாராட்டிற்கு எதிராக
ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்கு புறப்பான கருத்துக்களை பேசி வருகிறார். RSS அமைப்பின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட்டு, மதவாத சக்தியின் போதகராக தமிழ்நாட்டில் வளம் வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதேபோல் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. ஒன்றிய அரசே பாராட்டுகளை வழங்கி இருக்கிறது. உலகத்திலேயே உண்மைக்கு புறம்பாக பேசும் கட்சி பாஜக. அதில் ஒருவர் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி” என தெரிவித்துள்ளார்.